மிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நாயகியாக  விளங்கும் சமந்தாவின் திருமணம் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்தபடியே இருந்தன. பல ஹீரோக்களுடன் இணைத்து பேசப்பட்டார்.
சித்தார்த்துடன் சமந்தா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவியது.  ஆனால் இந்த செய்தி குறித்து சமந்தா ஏதும் சொல்லவில்லை. தற்போது சமந்தா சினிமாவில் தீவிரமாக நடித்துவருகிறார்.
இந்த நிலையில் திடீரென தனது திருமண அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார்.  ஆனால் தனது காதலன் யார் என்ற விவரத்தை திருமண தேதியை தெரிவிக்கும்போதுதான் சொல்வேன் என்றும் சமந்தா கூறியிருக்கிறார்.
69531
அவரது காதலர்  யார் என்பதை அறிய ரசிகர்கள் மத்தியில் ஆர்வம்  அதிகமாகியிருக்கிறது. பேஸ்புக், டுவிட்டரில் பல்வேறு நடிகர்களின் பெயர்கள் யூகங்களாக பரவ ஆரம்பித்திருக்கிறது.
இந்நிலையில் சமந்தா காதலிக்கும் நடிகர் நாகசைதன்யா என்று தெலுங்கு பட உலகில் தகவல் பரவியிருக்கிறது. இந்த நாகசைதன்யா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன்!
தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா தமிழில் வெற்றிகரமாக ஓடிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நடித்தார் இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.
அந்த படப்பிடிப்பின்போதுதான் இருவருக்கும் களது காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது.