17-students-drinking-200

நேற்று திட்டுவிளை அரசு மேல்நிலை பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர் உணவு இடைவேளையின் பொழுது திட்டுவிளை டாஸ்மாக் கடைக்கு சீருடையுடன் சென்று வோட்கா ஒரு பாட்டில் வேண்டும் என்று கேட்க ( மூவர் தனித்து ஒதுங்கி நிற்க இருவர் மட்டும் கடைக்கு சென்றனர் ) டாஸ்மாக் கடை ஊழியர்களும் அங்கு நின்றிருந்த குடிமகன்களும் அவர்களை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து ஓட ஓட விரட்டினர் ….

நான் சென்று மாணவர்களிடம் விசாரிக்க திட்டை பள்ளியில் படிப்பதாக கூறினர் …..நான் உடனடியாக பள்ளி சென்று தலைமை ஆசிரியரிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்று சொல்ல தலைமையாசிரியர் கொஞ்சம் வெளியே நில்லுங்கள் இங்கு ஆசிரியர்களின் கூட்டம் நடக்கிறது என்று சொல்ல …..எனக்கு நிற்க நேரம் கிடையாது உங்கள் பள்ளி மாணவர்கள் சாராயக்கடையில் வரிசையில் நிற்கிறார்கள் அதை சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன் என்று சொல்ல ஒரு சில ஆசிரியர்கள் உடனே வெளியே வந்து என்னிடம் தகவல்களை கேட்டனர் .

நான் சொல்லிவிட்டு வந்து ஒதுங்கி நின்ற மூன்று மாணவர்களை இன்னும் இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் உதவியுடன் பள்ளி ஆசிரியர் வசம் ஒப்படைத்தேன் ..தலைமை ஆசிரியர் வந்து கடுமையாக திட்டி உங்கள் புத்தக பைகளை எடுத்து செல்லுங்கள் உங்கள் வீட்டில் இருந்து பெரியவர்களை கூட்டி வாருங்கள் என்று சொன்னார் …..நான் அம்மா இந்த தம்பிகள் மீது தவறில்லை மூலைக்கு மூலை கலர் கலராக அரசாங்கமே கடை வைத்து நடாத்துவதால் இந்த பிள்ளைகளுக்கு ஆசை வந்திருக்கும் அதனால் கண்டித்து விட்டு மன்னித்து விடுங்கள் இவர்கள் சீருடை அணியாமல் சென்றிரூந்தால் கடைகாரர் கொடுத்திருப்பார் தானே என்று சொல்லி விட்டு வந்தேன் ……

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் குடிகாரர்கள் இந்த சமூகத்தில் இழிவானவர்களாக பார்க்க படுகின்ற இந்த காலத்தில் சீருடையில் வந்து சரக்கு கேட்ட அந்த்ய மாணவர்களை விரட்டியடித்த அந்த குடிமகன்கள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்களின் பொறுப்பும் சமூக அக்கறையும் போற்றத்தக்கது …..

தமிழரசன் அப்துல் காதர்  https://www.facebook.com/mujahithaqadir?fref=ts