
ஒற்றைக்காலில் நின்றாவது தான் நினைத்ததை சாதிப்பவர் சிம்பு என்பது அனைவருக்கும் தெரியும். தனது குணத்துக்கேற்ப இப்போது ஒற்றைக்கால் நடனமும் ஆடிவிட்டார்.

இது நம்ம ஆளு படத்துக்காகத்தான் இந்த ஒற்றைக்கால் டான்ஸ். ன் பிரபல டி.ராஜேந்தர் – சுசித்ரா பாடிய “மாமா வெயிட்டிங்” என துவங்கும் பாடலுக்கு தெலுங்கு பட நாயகி ஆஷாசர்மாவுடன் ஆடினார் சிம்பு.

இப்பாடலில் சிலம்பரசன் சுமார் 90 விநாடிகள் ஒற்றைகாலில் நடனமாடி அனைவரது பாராட்டுதலையும் பெற்றார் என்று சிலாகிக்கிறார் அப்பா டி.ராஜேந்தர்.
பலமுறை தள்ளிக்கொண்டே போகிறது இந்த படத்தின் ரிலீஸ். இப்போது நிச்சயமாக 27ந்தேதி வெளியாகிறது என்று சூடம் ஏற்றி சத்தியம் செய்கிறார்கள் படக்குழுவினர்.
Patrikai.com official YouTube Channel