ELNINO LA NINA SEA SURFACE TEMPERATURE
ஸ்பானிஷ் மொழியில்,”லா நினா விளைவு” என்றால் கடலின் சராசரி வெப்பநிலையை யை விடக் குளிரான வெப்பநிலை என்று பொருள்.
அதைப்போலவே “எல் நினோ விளைவு என்றால் கடலின் சராசரி வெப்பநிலையைவிட அதிகமான வெப்பநிலை என்று பொருள்.
skymet featured 1தனியார் வானிலை ஆராய்ச்சி நிலையம் ஸ்கைமெட்,இந்தியத் துணைக்கண்டத்தில் வறண்ட பருவமழையால் நிலவி வரும் எல் நினோ விளைவு எனப்படும் உலகளாவிய கடல்  தட்பவெட்பம் விரைவில் முடிவடைந்து அதற்கு நேரெதிர் நிலையான “லா நினா” விளைவு துவங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதனால் இந்நிறுவனத்தின் இந்திய பருவநிலை கணிப்பை நீண்ட கால சராசரியில் இருந்து109 சதவிகிதம் அதிகமாகக் கணித்துள்ளது. இதற்கு முன்பு 105% அதிகமாகக் கணித்திருந்தது.

  • இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் சராசரியாக 887 மில்லிமீட்டர் மழை பெய்யும்.
    ஸ்கைமேட் துணைத்தலைவர் – வானிலை நிபுணர் ஜி.பி.ஷர்மா சி.என்.பீ.சி.டி.வி-18 க்கு அளித்த பேட்டியில் “”கடந்த இரண்டு வருடங்களாகப் பருவநிலை பாங்கினை பாதித்து வந்த “எல் நினோ” விளைவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து  வருகின்றது. தற்பொழுது அதன் தாக்கம் பூஜ்யத்தை அடைய உள்ளது. எனவே இனி பருவநிலை சராசரியை விட நன்றாக இருக்கும். கூடிய விரைவில், நாம் “லா நினா விளைவை” நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம் ” கூறினார்.
    மேலும் அவர்,
    – ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களில் ஜூன் மாதம் முதல் பருவமழை பெய்யத் துவங்கும்
    -25 சதவிகிதம் சராசரிக்கும் மிக அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது நீண்ட கால சராசரியில் இருந்து110 சதவிகிதத்திற்கும் அதிக மழை.
    -37 சதவிகிதம் சராசரிக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது நீண்ட கால சராசரியிலிருந்து 105 முதல் 110 சதவிகிதத்திற்கும் அதிக மழை.
    -30 சதவிகிதம் சராசரி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது நீண்ட கால சராசரியிலிருந்து 96 முதல் 105 சதவிகிதத்திற்கும் அதிக மழை.
    -05 சதவிகிதம் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது நீண்ட கால சராசரியிலிருந்து 90 முதல் 95 சதவிகிதத்திற்கும் குறைவாக மழை.
    -03 சதவிகிதம் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது நீண்ட கால சராசரியிலிருந்து 90 சதவிகிதத்திற்கும் குறைவாக மழை.

வறட்சி நீடித்த கடந்த இரண்டாண்டுகளாக, ஸ்கைமெட் மற்றும் அரசு வானிலை ஆராய்ச்சி மையங்கள் வானிலையை மிகச்சரியாய் கணிக்க வில்லை எனினும் இருவரும் மாற்றி மாற்றிச் சரியாய் கணித்திருந்தனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்கைமெட் வறட்சியை சரியாய் கணித்திருந்தது. ஆனால் அரசு வானிலை ஆராய்ச்சி மையம் சராசரி பருவநிலையை கணித்திருந்தது. கடந்த 2015ல் ஸ்கைமெட் சராசரி பருவநிலையையும் அரசு வானிலை மையம் வறட்சியையும் கணித்திருந்தது