sanjay kaul featuredஇதுவரை, மாநில அரசுகள் ஆட்சிபொறுப்பேற்றப் பின் தன்னுடைய கட்சியின் நிர்வாகிகள், விசுவாசிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை நியமிப்பது வழக்கம்.
இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் முன்னெப்போதுமில்லாத வகையில் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்குக் கிடிக்கிப்பிடி போட்டுள்ளது.

 

Supreme-Court-building-New-Delhi-Indiaஇனி, அரசுத் தரப்பு வழக்கறிஞர் நியமனங்களை ஒரு குழு பரிசீலித்து அரசு வக்கீல் நியமனம் குறித்து முடிவெடுக்கும். மார்ச் 30ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் “அரசு வக்கீல் நியமனம் செய்யச் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு, அந்தக் கமிட்டி ஆராய்ந்து, தகுதியான வழக்கறிஞர்களின் பட்டியலைத் தயாரித்து தலைமை நீதிபதிக்குச் சிபாரிசு செய்யும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசித்து பணி நியமனத்தை முடிவு செய்வார். வெளி அழுத்தங்களால் சிபாரிசு செய்யப்படும் நியமனங்களை புறக்கணிக்கப் பட வேண்டும் “என்று உத்தரவிட்டுள்ளது.

sanjay kaul 1தமிழக அரசின் வழக்கறிஞர்கள் நியமனத்திற்காக இனி அரசு எந்தத் தேர்வு முறையையும் பின்பற்றத்தேவை இல்லை ஒப்பந்தமும் போடத்தேவை இல்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநலவழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழகஅரசு பின்பற்றித் தகுதியான வழக்கறிஞர்களை மட்டுமே அரசுத்தரப்பு வழக்கறிஞயராக நியமிக்கவும், தகுதியற்ற கட்சிக்காரர்கள், ஆதரவாளர்களை நியமிக்கக் கூடாது என உத்தரவிடவேண்டுமென வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட தமியமைநீதிபதி சஞ்ஜய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு, இவ்வழக்கை ஜூலை 14 வரை ஒத்திவைத்தனர்.