பீஹார் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று துவங்குகிறது. இதுவரை அங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிகள் அனலடிக்கும் பிரச்சாரத்தை செய்துவந்தன. இதில் ரொம்ப கூலாக பிரச்சாரம் செய்தவர் லாலுபிரசாத் யாதவ்தான்.
இப்போது டப்ஸ்மாஷ் தானே ரொம்பவே பேமஸ். அதாவது ஒரு விஐ.பி.யினஅ குரலுக்கு நாம் வாயசைத்து வீடியோவாக ஆக்கி வெளியிடுவது.
நம் ஊரில் கூட நடிகர்களின் குரலுக்கு வாயசைத்து பலரும் டப்ஸ்மாஷ் வெளியிட்டு வருவதை பார்த்திருப்பீர்களே..
இதைத்தான் லாலு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி, “மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அமர்ந்தால் ஏழைகளுக்கு நல்ல நாள் (அச்சே தின்) பிறக்கும்” என்றும், “ வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை நூறே நாட்களுக்குள் மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 முதல் 20 லட்சம் வரை போடப்படும்” என்றும் ஏற்ற இறக்கங்களுடன் பேசி கைதட்டல் வாங்கினார் அல்லவா…?
அந்த ஆடியோவை ஒலிபரப்பி, அதற்க குரல் அசைத்து டப்ஸ்மாஷ் செய்திருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். இதை சமூகவலைதளங்களிலும் ஓடவிட்டார்.
இதைப் பார்த்து ரசித்து சிரித்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 3 லட்சங்களுக்கும் மேல்.
“இதுவே மோடியின் முகமூடியை கிழிக்கும். எங்களுக்கு வாக்குளை அள்ளித்தரும்” என்கின்றனர் லாலு கட்சியினர்.
நீங்களும் பார்த்து ரசித்து சிரியுங்கள்!
[KGVID width=”360″]http://patrikai.com/wp-content/uploads/2015/10/laludubsmash.mp4[/KGVID]