
சென்னை: சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுதும் சில நிமிடங்களுக்கு முன், காலை ஏழு மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் மட்டும் கட்சிகளின் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை, திருச்சி, தஞ்சை, திருவையாறு, விருதுநகர், திண்டுக்கல், நாகை, பெரம்பலுார், அரியலுார், கரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்தது. தற்போதும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் லேசான மழை பெய்தது. தற்போது வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது.
திருநெல்வேலியில் கடும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சிரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டிய கடற் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது என்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக, தென்மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். .
பண மழை காரணமாக வாக்குப்பதிவு கூடும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் நிஜ மழையால் வாக்குப்பதிவு
Patrikai.com official YouTube Channel