download (1)
“சொந்த ஊருக்குப்போய் வாக்களிக்க வேண்டும் என்று ஆசைதான். ஆனால் பேருந்து கட்டணங்கள் தலைசுற்ற வைக்கின்றன” என்று புலம்புகிறார்கள் சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள்.
இந்த முறை நூறு சத வாக்குப்பதிவு நடந்தே ஆக வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுகிறது தேர்தல் ஆணையம். திரைப்பட நட்சத்திரங்களை வைத்து தேர்தல் விழிப்புணர்வு விளம்பரப்படங்களையும் எடுத்து ஒளிபரப்பி வருகிறது.
ஆனால், வாக்குரிமை இருந்தும் ஓட்டுப்போட முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் சென்னையில் தவிக்கிறார்கள்.
தங்களது பணி அல்லது தொழில் நிமித்தம் சென்னையில் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் வசிக்கிறார்கள். இவர்களக்கு சொந்த ஊரில் வாக்குரிமை இருக்கிறது.  அங்கு சென்றுதான் வாக்களிக்க வேண்டும்.
ஆனால் அங்கு செல்ல முடியாத நிலையில் தவிக்கிறார்கள். காரணம், தேர்தல் திங்கட் கிழமை நடக்கிறது. பொதுவாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியூர்  பேருந்துகளில் முன்பதிவு ஏற்கெனவே புக் ஆகியிருக்கும்.  ரயில்களில் முன்பதிவும் நிறைவடைந்திருக்கும்.
தமிழக போக்குவரத்துத்துறை, 750 சிறப்பு பேருந்துகளை  இயக்குவதாக அறிவித்திருந்தாலும், அதுபோதுமானதாக இருக்காது.
ஆகவே கடைசி நேரத்தில் மக்கள் சரணடைவது ஆம்னி பேருந்துகளில்தான்.  “ஆனால் திருவிழா காலங்களில் ஆம்னி பஸ் கட்டணத்தை பல மடங்கு உயர்த்துவதைப்போல, தற்போதும் உயர்த்தியிருக்கின்றன ஆம்னி பேருந்து நிறுவனங்கள்” என்று புலம்புகிறார்கள் மக்கள்.
சென்னையில் இருந்து மதுரை செல்ல, 2000 முதல் நான்காயிரத்து அறுநூறு வரை கட்டணங்கள நிர்ணயித்துள்ளன பல ஆம்னி பஸ் நிறுவனங்கள்.
இதனால் சொந்த ஊர் சென்று வாக்களிக்க முடியாமல் சென்னையில் திணறிக்கொண்டிருக்கிறார்கள்  லட்சக்கணக்கான மக்கள்.
நூறு சத வாக்குப்பதிவு ஆக வேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் தேர்தல் ஆணையம்தான் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்கள் விருப்பம்.
தேர்தல் ஆணையம் கவனிக்குமா?
(இதற்கிடையே