நாளை மறுநாள் தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. ஒரு சிலர் வாக்காளர் அடையாள அட்டையை பெறாமல் இருக்கலாம். அல்லது தொலைத்திருக்கலாம். அப்படியானால் அவர்கள் எப்படி ஓட்டுப்போடுவது என்பதை தேர்தல் ஆணையம் வழிகாட்டி உள்ளது.
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கீழ்க்கண்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்க முடியும்.
தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்கள் விவரம் வருமாறு
1. கடவுச்சீட்டு (பாஸ் போட்)
2. ஒட்டுநர் உரிமம்
3. மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்)
4. வங்கி/ அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது)
5. நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு)
6. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை;
7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை
8. தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
9. புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம்
10. தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச்சீட்டு
11. பார்லி., சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.
இந்த ஆவணங்களில் ஏதேனும் வாக்காளர்கள் காண்பித்து தங்களின் ஓட்டுக்களை பதிவு செய்து கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.