na
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான மேலும் 25 ரகசிய ஆவணங்களை மத்திய அரசு இன்று வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது.
மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா அந்த ஆவணங்களை வெளியிடுவார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவின் தலைசிறந்த சுதந்திரப் போராட்டத் தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கடந்த 70 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.
அந்த ஆவணங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று நேதாஜியின் உறவினர்கள், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கடந்த ஆண்டு வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அந்த ஆவணங்களை படிப்படியாக மத்திய அரசு பகிரங்கப்படுத்தி வருகிறது. www.netajipapers.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் 50 ஆவணங்களை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கடந்த மாதம் வெளியிட்டார். தற்போது மேலும் 25 ஆவணங்கள்  இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ளன.