
பொதுவாகவே படங்களில் பல மாறுதல்களை செய்து, போலியான படங்களை போட்டோ ஷாப் மூலம் உருவாக்குவதில் பிரதமர் மோடி ஆதரவாளர்கள் “புகழ்” பெற்றவர்கள்.
அதே பாணியில் பல அரசியல் கட்சி ஆதரவாளர்களும் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்திலும் அந்த போலி வகை போட்டோ ஷாப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் இருந்ததாகவும், தற்போதைய அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் சொல்லுகிறது அந்த விளம்பரம். அதில், தற்போது மகிழ்ச்சியுடன் இருக்கும் தமிழக விவசாயி என்று, வேறு மாநில விவசாயி படம் அச்சேறி உள்ளது.
இதை ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார்கள், வலைதளத்தில் பலர். இது அ.தி.மு.க. மீது மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
(படம் நன்றி: விகடன் குழுமம்)
Patrikai.com official YouTube Channel