எஸ்.ஆர்.எம். தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலை கிண்டியில் திடீரென தீப்பிடித்து எறிந்தது. உடனே மாணவர்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தனியார் பல்கலைக்கழக கல்லூரி பேருந்து திடீரென தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கக்கூடிய மாணவர்கள் மந்தவெளியில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு பேருந்தில் அழைத்து கிண்டி வழியாக வந்தனர்.
கிண்டி வழியாக சர்தார்பேட்டை சாலையில் வரும்போது திடீரென பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து புகை வெளிவந்தது. உடனடியாக ஓட்டுநர் வினோத் என்பவர் பேருந்தின் வேகத்தை குறைத்து பேருந்தை ஓரமாக நிறுத்தினர். அந்த பேருந்தில் மொத்தமுள்ள 38 மாணவ, மாணவிகளை உடனடியாக வெளியேற்றினார். மாணவ, மாணவிகள் அவசரஅவசரமாக வெளியேறிய அடுத்த நிமிடமே பேருந்து மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேலாக பேருந்து எரிந்தது.