
திருவாரூரில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
நேற்று முன்தினம் சென்னையில் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்த கலைஞர், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திருவாரூருக்கு சென்று சன்னதி தெருவில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கினார்.
திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள அவருடைய தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்கு இன்று (திங்கட்கிழமை) காலை செல்கிறார்.
பின்னர் மதியம் 2 மணி அளவில் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து மீனாட்சியிடம், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
Patrikai.com official YouTube Channel