கோஹினூர் – என்றால் மலையளவு ஒளிவீச்சு என்று பொருள். இந்த விலைமதிப்பில்லா வைரத்திற்கு கோஹினூர் என்று பெயரிட்டவர் நாதிர்ஷா எனும் ஒரு பாரசீக மன்னன். 15 ம் நூற்றாண்டுகளிலேயே இந்த வைரத்தின் மதிப்பு கேட்டால் பிரமிப்பூட்டுவதாக இருந்திருக்கிறது. கோஹினூர் வைரத்தை விலை கொடுத்து வாங்கும் பணத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இரண்டரை நாட்கள் உணவளிக்க முடியும் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
கடந்த 2015 ஆம் ஆண்டு, பிரிட்டனில் உள்ள, ஆக்ஸ்போர்டு ஒன்றிய சங்கத்தில், காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் உரையாற்றியபோது, ‘விலை மதிப்பில்லாத கோஹினுார் வைரத்தை, இந்தியாவில் இருந்து கொள்ளையடித்து சென்று, 200 ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருக்கும் பிரிட்டன் அரசு, அந்த வைரத்துடன், தகுந்த இழப்பீடும் வழங்க வேண்டும்’ என்றார்.
இதையடுத்து, 2015 செப்டம்பர் மாதம் 15 தேதி ,பிரிட்டனின் தொழிலாளர் கட்சி எம்.பி.,யும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கீத் வாஜ், நேற்று, வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோஹினுார் வைரத்தை இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இதுகுறித்து தீவிரமாக பிரசாரம் செய்யப்படும். நவம்பரில் பிரிட்டன் வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோஹினுார் வைரம் அளிக்கப் படவேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
கோஹினூர் வைரத்தின் வரலாறு அறிய இங்கே சொடுக்கவும் .