நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் கட்டுரை:
தி.மு.க வேட்பாளர் பட்டியலை அறிவிக்கப்பட்டுள்ளது. “இந்த பட்டியலை படித்த தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்” என்கிறது அக் கட்சி வட்டாரம்.
“கட்சிக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தராமல், வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. தனியார் கல்லூரிகளஇல் பணம் வாங்கிக்கொண்டு சீட் கொடுப்பது போல இங்கும் நடந்திருக்கிறது. இந்த பட்டியலைப் பார்க்கும் போது கருணாநிதியி்ன் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்பதும், அது ஸ்டாலின் மூலமாக அவரது மருமகன் கைகளுக்கு சென்றுவிட்டது என்பதும் தெரிகிறது” என்றெல்லாம் புலம்புகிறார்கள் கட்சிக்காரர்கள்.
இவர்கள் சொல்வது என்ன?
”தென் மாவட்டங்களில் பொன் முத்துராமலிங்கம், பவானி ராஜேந்திரன் கவுஸ்பாஷா தங்கவேலு போன்ற சீனியர்களுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. கேட்டால், இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டியிருப்பதால், மூத்தவர்களுக்குத் தர முடியவில்லை என்கிறார்கள். அப்படி என்றால், கலைஞரம், தளபதியும் இளையவர்களா?” என்று கேட்கிறார்கள் அந்த தி.மு.க. தொண்டர்கள்.
மேலும், “அழகிரி கட்சியை விட்டு நீக்கப்பட்டாலும், அவரது ஆதரவாளர்கள் கணிசமானோர் இன்னமும் கட்சியில் பிடிப்புடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அழகிரி ஆதரவாளர்கள் என்பற்காகவே அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அந்தந்த பகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்கவர்கள். இதே போல கனிமொழியின் ஆதரவாளர்கள் என்பதற்காகவும்,செல்வாக்கு மிக்க சிலர் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு அந்த தொகுதிகளில் பாதிக்கப்படும்” என்ற ஆதங்கம் தி.மு.க. வட்டாரத்தில் பரவலாக எழுந்திருக்கிறது.
மேலும், “ம.தி.மு.க.வில் இருந்து மிகச் சமீபத்தில் வந்த மாசிலாமணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அதே போல தே.மு.தி.க.வில் இருந்து சில நாட்களுக்கு முன் வந்த மூன்று பேருக்கு தொகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்பாக கட்சிக்கு வந்து, கட்சிக்காக கடுமையாக உழைத்துவரும் பலரும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதற்கு ஒரு உதாரணண் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.
ஈழத்தமிழர்களுக்கு தி.மு.க. இனத்துரோகம் செய்துவிட்டது என்று உலகத் தமிழர்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்ட காலகட்டத்தில், ஸ்டாலினை அழைத்துக்கொண்டு ஜெனிவா சென்று, மனு கொடுக்க வைத்தார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். அப்போது இவரர், “ தனது அரசியல் கற்பை இழந்து தி.மு.க.வின் கலங்கத்தை துடைக்கிறார்” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆது மட்டுமல்ல, ஜெயலலிதாவின் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால், கட்சிக்கு இப்போது வந்த மாசிலாமணிக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது” என்று குமுறுகிறார்கள் நடுநிலை கட்சித் தொண்டர்கள்.
அது மட்டுமல்ல.. வாரிசு அரசியல் என்பது இப்போது தி.மு.கவின் அடிமட்டம் வரை பரவிவிட்டதை இந்தத் தேர்தல் வெளிப்படையாக உணர்த்துகிறது.
மு.கண்ணப்பன் மகன், என்.வி.என். சோமு மகள், சு.ப. தங்கவேலன் மகன், பி.டி.ஆர். மகன், சமயநல்லூர் செல்வராஜ் மகள், என்.பெரியசாமி மகள், டி.ஆர். பாலு மகன், சற்குணபாண்டியன் மருமகள், அன்பில் பொய்யாமொழி மகன், என திமுக இரண்டாம் நிலை தலைவர்களின் வாரிசுகள் வேட்பாளர் பட்டியலை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
இது, “இனி கட்சியில் உழைத்து முன்னேறி பொறுப்புகளை பெற முடியாதா.. வாரிசு அரசியல்தான் அடிமட்டம் வரை நடக்குமா” என்ற விரக்தியையும் தொண்டர்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
“வேட்பாளர் பட்டியலை மாற்றியோ, அல்லது சரியான விளக்கம் கொடுத்தோ தொண்டர்களை சமாதானப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தி.மு.க. தலைமை. இல்லாவிட்டால் அக் கட்சியின் வெற்றி வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும்” என்கிற பேச்சு அரசியல் வட்டாரத்தில் உலவுகிறது.