
தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். இது கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தேமுதிக – மக்கள் நலக் கூட்டணியின் மாநாடு வரும் 10ம் தேதி மாமண்டூரில் நடைபெற உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்துப்பேசினார் வைகோ. இந்த சந்திப்பின்போது, வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ள அக்கூட்டணியின் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேமுதிகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் எம்எல்ஏக்கள் விலகுவது குறித்தும் பேசப்பட்டது என்று கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel