தம்முடைய ஆட்சியின் அவலங்களை திசைத் திருப்பும் விதமாக “பாரத் மாதா கி ஜே” கோசத்தை வைத்து எதிர்க்கட்சிகளை கையாண்டு வருகின்றது பா.ஜ.க. அரசு.
மக்களின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பேசவிடாமல், குஜராத்தில் மோடியின் ஆட்சியில் நடந்த முறைகேடுகளை சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள மக்கள் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப இது கைக்கொடுக்கின்றது.
பா.ஜ.க. தேசிய மாநாட்டில், “பாரத் மாதா கி ஜே” கூறமுடியாது எனக் கூறுவது இந்திய அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என தீர்மானம் நிறைவேற்றியது.
இது குறித்து மகாராஸ்திர முதல்வர், பாரத் மாதா கி ஜே” எனக் கூற முடியாதவர்கள், நாட்டை விட்டு வெளியேரவேண்டும் என்றார்.
பாபா ராம்தேவ் ஒரு படி மேலே சென்று, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளைப் போல் பேட்டிக் கொடுத்தார். அதில், ” சட்டம் தடுக்கவில்லை என்றால், பாரத் மாதா கி ஜே” சொல்லாதவர்கள் தலைச் சீவுவேன்” என ஆவேசத்துடன் கூறினார்.
இவ்வளவு நடந்தாலும் பிரதமர் மோடியும், மத்திய அரசும், இதனைக் கண்டிக்காமல் மௌனம் காத்து வந்தது.
இந்நிலையில், வெங்கய்யா நாயுடு, ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசு உத்தரவு எதுவும் அப்படி பிறப்பிக்காத வரையில் அது அரசின் கருத்து அல்ல என்பதை புரிந்துக்கொள்ளவும் என்றார். பாரத் மாதா கி ஜே” என்பது உணர்வு சம்பந்தப் பட்டது. பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் அதனை பெருமையுடன் உச்சரித்தும், முழக்கமிட்டும் வந்ததை மறக்கக் கூடாது” என்றார்.
தொடர்புடைய பதிவுகள்:
ஃபட்னாவிஸ் துவேசப் பேச்சு : பாரத் மாதா கி ஜே சொல்லவில்லை என்றால் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள்