இன்று மும்பை வான்கடெ மைதானத்தில் நடைப்பெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், மேற்குஇந்தியத் தீவுகள் அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிச்போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலில் ஆடிய இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 192 ரன் கள் எடுத்தது. அதிகப்பட்சமாக விராத் கோஹ்லி 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ரன் கள் குவித்தார்.
அடுத்து ஆடிய மேற்குஇந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர்களான கிரிச் கெயில் மற்றும் சாமுவேல்ஸ் விக்கெட்டுகளை இந்தியா எளிதில் வீழ்த்திவிட்டாலும், அடுத்து ஆடவந்த சைமன்ஸின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிப்பெற்றது. லெண்டில் சைமன்ஸ் 51 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்ட்ரிகள் உட்பட ஆட்டமிழக்காமல் 83 ஓட்டங்களை குவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று பந்துவீச்சுத் துறையில் வீரர்கள் சோபிக்கத் தவறியதே தோல்விக்கு காரணமாகும்.
இன்று நடைபெற்ற இருபது20 மகளிர் உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில், நியூஸிலாந்து மகளிர் அணியை வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது
1980களில் கிரிக்கெட்டினை ஆட்சி செய்துவந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் இருவரும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதை பத்திரிக்கை.காம் வாழ்த்துகின்றது.
இறுதிபோட்டியில் இங்கிலாந்தும், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் மோதவுள்ளன.
இந்திய அணியின் வீரர்கள், சிறிய ஓய்வுக்குப்பின், ஐ.பி.எல் போட்டியில் விளையாடவுள்ளனர்.
தோனி பூனே அணியின் தலைவராக களம் இறங்க உள்ளார்.
ஆஸ்த்ரேலிய ஊடகர் ஒருவர் தாங்கள் இந்தத் தோல்விக்கு பிறகு ஓய்வு முடிவை எடுப்பீர்களா என வினவியபோது, அவரை மேடைக்கு அழைத்து, தமக்கு ஓய்வு பெறும் எண்ணம் துளியும் இல்லை என்பதை தனக்கே உரிய பாணியில் உறுதிப்படுத்தினார்.