ஃப்ரான்சில் உள்ள பாரிசில் புகழ் பெற்ற மீன்கள் காட்சியகம் உள்ளது.
ஒரு இரவு முழுவதும் சுறாக்கள் சூழ தூங்கும் படுக்கையறை வசதியை பாரிசில் உள்ள மீன் காட்சியகம் துவக்கவுள்ளது. ஆந்தைப்போல் இரவில் கண்விழிப்பவர்கள் , அங்குள்ள சுறாக்களை எண்ணி இரவைக் கழிக்கலாம்.
இந்த சாகசமான படுக்கையறையில் தங்க ஆர்வமாக உள்ளதா ?
அதற்காக நாம் செய்ய வேண்டியது ரொம்பவும் சுலபமான ஒன்றுதான்.
அதற்கான விதிமுறை என்ன ?
இந்த வீட்டில் தங்குவதற்கான விதிகள் மிகத்தெளிவாக உள்ளன: இரவில் நீச்சல் அடிக்கக் கூடாது,
இரவில் செல்ஃபி எடுக்கக் கூடாது. சுறாக்கள் ஒளியைக் கண்டால் மதம் பிடிக்கும்.
இரவில் எல்லா நேரங்களிலும் படுக்கையறையில் உள்ளேயே இருக்க வேண்டும். மற்றும் முக்கியமாக “ஜாஸ்” நேரிடையாக பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அது. உங்கள் படுக்கையறையை சுறாக்கள் சுற்றி வருதல் தடுக்கும்.
மறைந்து வரும் அரிதான 35 உயிரினங்கள், மிகவும் சிறப்பாக பார்வையிட வழிவகுக்கும் ஒரு இரவு தூக்கம் கொள்ள வித்தியாசமான படுக்கையறை பாரிஸ் மீன் காட்சியகத்தில் திறக்கப்படவுள்ளது.
ஒருவருக்கு ஆர்வம் மற்றும் போதுமான தைரியம் இருந்தால், மூன்று இரவுகள் தங்க, மீன் மற்றும் விடுமுறை வீட்டில் Airbnb வலைத்தளத்தில், ஏப்ரல் மாதம் ஏற்பாடு செய்துள்ள ஒரு கட்டுரைப் போட்டியில் 300 வாக்கியங்களில் “நான் ஏன் சுறாக்கள் சூழ்ந்த படுக்கைஅறையில் தூங்கவேண்டும் “ எனும் தலைப்பில் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் படும் மூன்று நபர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டும்.
இந்த போட்டியின் நோக்கம், மக்களுக்கு சுறா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே. ஏனெனில், சுறாக்கள் பாதுகாக்கப் பட வேண்டும். அவை சுற்றுச்சூழலுக்கு முக்கியம். “சுறாக்கள் மறைந்துவிடும் என்றால், அடிப்படையில் நாமும் மறைந்துவிடும்.”
ஏப்ரல் 11, 12 மற்றும் 13ம் தேதி நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த பொன்னான வாய்ப்பு காத்திருக்கின்றது.
என்ன பேனாவை கையில் எடுத்துவிட்டீர்களா ? வாழ்த்துக்கள்.