
வானிலை என்று நினைத்ததும் ரமணன் தான் மக்கள் நினைவுக்கு வருகிறார். அந்த அளவுக்கு ரமணன் வானிலையோடு ஒட்டி உறவாடியவர் என்றால் மிகை இல்லை. புயல் நேரத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக விடுமுறை நாட்களிலும் அவர் அலுவலகத்திற்கு வந்து வானிலை பற்றி பத்திரிகையாளர்களிடம் கூறுவது வழக்கம்.
அப்படிபட்ட வானிலை இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் மார்ச் 31-ந்தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளுக்கு சென்று வானிலை பற்றிய விவரத்தை கற்பிக்க வகுப்பு எடுக்க உள்ளேன் என்று ரமணன் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel