“தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. ஆனால், அதனை உதாசீனப்படுத்து தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கூட்டணி அமைந்திருக்கிறார் விஜயகாந்த்” இக் குற்றச்சாட்டுக்கு எதிராக திமுக விளக்கம் கேட்டு வைகோ அவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி வழக்கறிஞர் மூலம் வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதற்கு சட்டப்படி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும், திமுக மீது வைகோ கூறிய குற்றச்சாட்டை ஏழு நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்றும் கருணாநிதி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, “தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. ஆனால், அதனை உதாசீனப்படுத்து தூக்கி எறிந்துவிட்டு எங்களோடு கூட்டணி அமைந்திருக்கிறார் விஜயகாந்த்” என்று வைகோ கூறினார்.
”வைகோவின் குற்றச்சாட்டு அபாண்டமானது” என்றும் அதற்கு அவர் சட்டப்படி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின் செய்தியாளர்களை இதை தெரிவித்துள்ளார்.