இன்று நடைப்பெற்ற உலகக்கோப்பை T20 போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின.
விறுவிறுப்புடன் நடைப்பெற்ற போட்டியின் முடிவில், இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
பேட்ஸ்மென்கள் சோபிக்கத் தவறிய இந்த ஆட்டத்தில், இரு அணியின் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர்.
இவ்வெற்றிக்கு, அணித்தலைவர் தோனியின் சிறப்பான செயல்பாடும் முக்கியக் காரணமாகும். கடைசிப்பந்தில், ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரனைப்போல் ஓடி, ஆட்டக்காரரை ரன் அவுட் செய்து வெற்றியை உறுதி செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஏழு விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. 147 ரன் கள் எடுத்தால் வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் வங்கதெசம் ஆடத் துவங்கியது. அதிகப்பட்சமாக சுரெஷ் ரைனா 30 ரன்கள் எடுத்தார்.
சிறப்பான துவக்கம்:
வங்கதேசத் துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய பந்துவீச்சை லாவகமாக சமாளித்து, அந்த அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தனர்.
பிறகு, அஸ்வின், ரைனா, ஜடெஜாவின் சுழலில் சற்றுத் திணறி விக்கெட்டுகள் விழுந்தாலும், எட்டவேண்டிய இலக்கு எளிதானதாகவே இருந்தது.
பலே பாண்டியா :
வெல்லும் தருவாயில் இருந்த வங்கதேச அணியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா திணறியது.
இந்நேரத்தில், தோனியின் நம்பிக்கையை வீணாக்காமல், தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணியை , புதிய பந்துவீச்சாளர்கள் பும்ராவும், ஹர்திக் பாண்டியாவும் சிறப்பாக பந்து வீசி வெற்றியடையச் செய்தனர்.
வங்கதேச அணியில் தமிம் இக்பால் அதிகப் பட்சமாக 35 ரன்கள் அடித்தார்.
இந்தியப் பந்துவீச்சு:
ஆஷிஸ் நெஹ்ரா : 4-0-29-1
ஜஸ்ப்ரீத் பூம்ரா : 4-0-32-0;
ஹர்திக் பாண்டியா: 3-0-29-2
அஸ்வின் : 4-0-20-2
ஜடேஜா : 4-0-22-2
ரைனா: 1-0-9-1
இப்போட்டியில், அஸ்வின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப் பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், இந்தியா அரையிறுதிக்கு முன்னேரும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
குரூப் B யில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்று போட்டிகளில் வென்றுள்ள நியுசிலாந்து முதல் இடத்தில் உள்ளது.
குரூப் B அணிகளின் இன்றைய நிலை கீழ்வருமாரு:
முழு ஸ்கொர்:
இந்தியா பேட்டிங்:
ரோஹித் சர்மா | c S ரஹ்மான் & b முஸ்டாஃபிசூர் | 18 | 16 | 1 | 1 | 112.5 |
சிகந்தர் தவன் | lbw ஷகிப் | 23 | 22 | 2 | 1 | 104.55 |
விராத் கொஹ்லி | b ஷுவாகதா | 24 | 24 | 0 | 1 | 100 |
சுரெஷ் ரைனா | c S ரஹ்மான்& b அல்-அமின் | 30 | 23 | 1 | 2 | 130.43 |
ஹர்திக் பாண்டியா | c சௌம்யா சர்கார் & b அல்-அமின் | 15 | 7 | 2 | 1 | 214.29 |
தோனி (c) & (wk) | not out | 13 | 12 | 1 | 0 | 108.33 |
யுவராஜ் சிங் | c அல்-அமின் & b மஹமதுல்லா | 3 | 6 | 0 | 0 | 50 |
ரவிந்திர ஜடெஜா | b முஸ்டாஃபிசூர் | 12 | 8 | 2 | 0 | 150 |
ரவி அஸ்வின் | not out | 5 | 2 | 1 | 0 | 250 |
ஆஷிஸ் நெஹ்ரா | dnb | 0 | 0 | 0 | 0 | 0.00 |
ஜஸ்ப்ரீத் பூம்ரா | dnb | 0 | 0 | 0 | 0 | 0.00 |
வங்கதேச பந்துவீச்சு:
மோர்தசா | 4 | 0 | 22 | 0 | 5.5 | ||
சுவாகதா ஹொம் | 3 | 0 | 24 | 1 | 8 | ||
அல் அமிம் ஹுசைன் | 4 | 0 | 37 | 2 | 9.25 | ||
முஸ்திஃபுர் ரஹுமான் | 4 | 0 | 34 | 2 | 8.5 | ||
ஷகிப் அல் ஹசன் | 4 | 0 | 23 | 1 | 5.75 | ||
மஹுமுதுல்லா | 1 | 0 | 4 | 1 | 4 |
வங்கதேச அணி பேட்டிங்:
தமிம் இக்பால் | st தோனி& b ஜடெஜா | 35 | 32 | 5 | 0 | 109.38 |
முஹமது மிதுன் | c பாண்டியா & b அஸ்வின் | 1 | 3 | 0 | 0 | 33.33 |
சப்பிர் ரகுமான் | st தோனி & b ரைனா | 26 | 15 | 3 | 1 | 173.33 |
சகிப் ஹல் ஹாசன் | c ரைனா & b அஸ்வின் | 22 | 15 | 0 | 2 | 146.67 |
மோர்தசா(c) | b ஜடெஜா | 6 | 5 | 0 | 1 | 120 |
மஹமதுல்லா | c ஜடெஜா& b பாண்டியா | 18 | 22 | 1 | 0 | 81.82 |
சௌம்யா சர்க்கார் | c கொஹ்லி & b நெஹ்ரா | 21 | 21 | 1 | 1 | 100 |
முஷ்ஃபிகுர் ரஹிம் (wk) | c தவான் & b பாண்டியா | 11 | 6 | 2 | 0 | 183.33 |
ஷுவாகதா ஹொம் | not out | 0 | 1 | 0 | 0 | 0 |
முஸ்டாஃபிர் ரஹ்மான் | runout (தோனி) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
அல் ஹமின் ஹொசைன் | dnb | 0 | 0 | 0 | 0 | 0.0 |