ஒன்றுக்கு மேற்பட்ட வினையாற்றக்கூடிய மருந்துகளை இணைத்து உட்கொள்வதை நிலையான மருந்துக் கலவை( நி.ம.க) என்றழைக்கின்றனர்.
மத்தியச் சுகாதாரத்துறை 344 நி.ம.க மருந்துகளை அபாயகரமான கலவை எனக்கூறி தடை விதித்து மாற்று மருந்துகளைப் பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனை உடனடியாக அமல்படுத்தியதுடன் அரசு கஜட் எனும் விவரத் தொகுப்பு அகராதியிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தடையின் பின்னனி பின்வருமாறு:
இந்தப் பிரச்சனையில் உள்ள முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு சிறந்த ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட வல்லுனர் குழுவை மத்தியஅரசு நியமித்ததாகவும், ஆய்வுமுடிவின் அடிப்படையில் 344 மருந்து நிறுவனங்களுக்கு விளக்கம்கேட்டு சம்மன் அனுப்பப்பட்டதாகவும், வல்லுனர் குழுவின் பரிந்துரைகுறித்த தங்கள் தரப்பு வாதத்தை வைக்க வாய்ப்பு வழங்கப் பட்டதாகவும், பெரும்பாலான நிறுவனங்கள் இதனை உதாசீனப்படுத்தி பதில் அளிக்க முன்வரவில்லை யெனவும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட்டதன் பிறகே, கவனமாகப் பரிசீலித்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை மூத்த அதிகாரி விளக்கமளித்தார்.
வல்லுனர் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில், 344 மருந்துக்கலவைகளை மனிதர்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுக்க 344 மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் வினியோகத்தை தடைசெய்வதென முடிவெடுப்பது அவசியமென மத்திய அரசு நம்பியது. எனவே மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு இந்தத் தடையாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசு கஜட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
344 நி.ம.க. பட்டியலில் குளொபெனிராமைன் மாலியட் + கொடெய்ன் சாறும் அடங்கும். இந்தத் தடையை அடுத்து குளொபெனிராமைன் மாலியட் + கொடெய்ன் சிரப் நிலையான மருந்துக் கலவையை ஃபைசர்(Pfizer) நிறுவனம் கொரெக்ஸ் மருந்துத் தயாரிப்பு மற்றும் வினியோகத்தை நிறுத்திவிட்டது.