2026 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இதில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்த்து போலந்தைச் சேர்ந்த மஜா ஸ்வாலின்ஸ்கா விளையாடினார்.

6-3, 6-3 என்ற கணக்கில் போட்டியை வென்ற ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் வென்றார்.

மயா ஸ்வாலின்ஸ்கா

அதேவேளையில், தோல்வியடைந்த போலந்தைச் சேர்ந்த மஜா ஸ்வாலின்ஸ்கா இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த சாத்விகா சாமா என்பவரை எதிர்கொண்ட போட்டி குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்படுகிறது.

2016ம் ஆண்டு ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற ஜூனியர் பெட் கோப்பை இறுதிப் போட்டியில் சாத்விகா சாமா மற்றும் மஜா ஸ்வாலின்ஸ்கா இருவரும் மோதினர்.

இதில் மஜா ஸ்வாலின்ஸ்கா வெற்றிபெற்று ஜூனியர் பெட் கோப்பையைக் கைப்பற்றினார்.

சாத்விகா சாமா

தொடர்ந்து, 2019ம் ஆண்டு தெற்காசிய போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய அணிக்காக விளையாடிய சாத்விகா சாமா தங்கம் வென்று சாதனை படைத்தார்.

2020-இல் WTA ஒற்றையர் தரவரிசையில் 809-வது இடம் வரை முன்னேறிய சாமா அதன்பின் டென்னிஸ் போட்டியில் இருந்து காவல்துறையில் தனது கவனத்தை செலுத்தினார்.

இதையடுத்து தெலுங்கானா மாநில போட்டி தேர்வில் வெற்றிபெற்ற அவர் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் அம்மாநில டி.எஸ்.பி.யாக தேர்வுபெற்றார்.

தற்போது அவர் தெலுங்கானா மாநில டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் நிலையில் அவருடன் அதே காலகட்டத்தில் டென்னிஸ் விளையாட்டை தேர்ந்தெடுத்த மஜா ஸ்வாலின்ஸ்கா முதல்முறையாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறி சாதனை படைத்துள்ளதுடன் உலக தரவரிசையில் 21வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இரண்டும் வெவ்வேறு விதமான சாதனைகள் என்றபோதும் இது சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.

[youtube-feed feed=1]