சென்னை: விஜய் தலைமையிலான தமிழக அமைச்சர்களாக வன்னி அரசு, ஷாஜகான் அமைச்சர்களாக இன்று பதவி ஏற்றனர்.
தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு ஆதரவு வழங்கிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கி வரும் தவெக, இதுவரை அமைச்சர் பதவி கேட்காத விசிக முஸ்லிம் கட்சிகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அமைச்சர் பதவி ஏற்க வைத்துள்ளது.

அதன்படி, இன்று விசிக வன்னிஅரசு, முஸ்லிம் லீக் கட்சி ஷாஜகான் ஆகியோருக்கு கவர்னர் அர்லேகர்பதவி பிரமாணம் செய்து வைத்தார். மூன்றாவது முறையாக இன்று நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் விசிக எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதன் காரணமாக, விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெறுகின்றன.
தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் கடந்த 10-ஆம் தேதி பதவியேற்றனர். அவர்களைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை (மே 21) நடைபெற்றது. புதியதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவியேற்றனர்.
[youtube-feed feed=1]