சென்னை: மே 18ந்தேதி சென்னையில், சிஎஸ்கே எஸ்ஆர்எச் இடையே  லீக் போட்டி நடைபெற உள்ள நிலையில்,  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

போட்டியை காண டிக்கெட் வைத்திருப்பவர்கள்,  மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும், அன்றைய தினம்  மெட்ரோ ரெயில் சேவை நேரம் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கலாம்  பயணிகளின் வசதியை மேம்படுத்தவும், நகரில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தடையற்ற பயணத்தை வழங்கவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் CSK Cricket Limited நிறுவனத்துடன் இணைந்து “IPL 2026” லீக் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்காக, பிரத்யேக மெட்ரோ பயணங்களை வழங்க முன்வந்துள்ளது.

சென்னை  சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)- சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகள் இடையிலான IPL 2026 லீக் போட்டி எண் 63, வருகின்ற திங்கள்கிழமை (18-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணங்களும், கூடுதல் மெட்ரோ ரெயில் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள், பயணச் சீட்டுகளில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.

இந்த போட்டிக்காக ரசிகர்களுக்கு ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், நுழைவுச்சீட்டில் (both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். சென்னையில் செயல்பாட்டில் உள்ள எந்தவொரு மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.   போட்டி நடைபெறும் நாளன்று, மெட்ரோ இரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி (Sunday timetable) இயக்கப்படும். IPL 2026 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

[youtube-feed feed=1]