டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம் அரங்கேறி உள்ளது. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், படுக்கை வசதிகொண்ட தனியார் பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பாஜக பெண் முதல்வர் ஆட்சி செய்துவரும் தலைநகர் டெல்லியில் தனியார் பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள  சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொடூர சம்பவமானது கடத்ந 2012ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில்  கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை நடைபெற்றது. இது உலக நாடுகளை உலுக்கியது. அதுபோன்ற சம்பவம் தற்போதும் அரங்கேறி உள்ளது.

டெல்லியில் பேருந்துக்குள்ளேயே ஒரு பெண்ணை ஓட்டுநரும் நடத்துநரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தச் சம்பவம் மே 11 ஆம் தேதி இரவு நடைபெற்றதாகவும் அதில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கொடூர சம்பவத்தை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. , இந்தச் சம்பவத்தை 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ’நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை – கொலை’ சம்பவத்தோடு ஒப்பிட்டு, இது நாட்டுக்கும், மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கும்  “பெரும் அவமானம்” என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் வெளியான நிலையில்,  காவல்துறை தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் ஒரு தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். சரஸ்வதி விஹாரில் உள்ள பி-பிளாக் பேருந்து நிலையம் அருகே அவர் சென்றபோது, ​​பேருந்தின் கதவருகே நின்றவரிடம் நேரம் கூட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த நபர் (குற்றவாளிகளில் ஒருவர்)  அந்தப் பெண்ணை பேருந்தினுள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.அவரைத்தொடர்ந்து அந்த பேருந்து ஓட்டுநரும் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மே 12 ஆம் தேதி, ராணி பாக் காவல் நிலையத்தில் சில குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை சார்பில் அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

[youtube-feed feed=1]