சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வராக பதவி ஏற்பார் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

.தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. இது அரசியல் களத்தை மேலும் சூடாக்கி உள்ளது.
இந்த நிலையில், சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடியின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து விட்டு திரும்பிய அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்களுடன் பேசினார். அப்போதுஅவர் கூறியதாவது,
தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அதுபற்றி கூற முடியாது. நல்லதே நடக்கும் என்று நம்பப்படுகிறது.
அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார், நல்லாட்சி தருவார். அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடவுளின் ஆசியுடன் அது நடக்கும்” எனத் தெரிவித்துள்ளார்
.தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில், பெரும்பான்மை எண்ணிக்கைக்கு இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்படுகின்றனர். விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் நிலையில், அக்கட்சிகள் அவர்களின் செயற்குழுக் கூட்டத்தில் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று மாலைக்குள் விசிக, இடதுசாரிகள் அவர்களின் நிலைப்பாட்டை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ள அதிமுகவும் ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பிற கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
[youtube-feed feed=1]