சென்னை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்… திமுகவுக்காக இன்று முதல் தனது  பிரசாரத்தை தொடங்குகிறார்,  அவரது பிரசார பயணம் தென்மாவட்டங்களில் தொடங்குகிறது.

தமிழகத்தில் ஆளும்  தற்போதைய தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். அதற்கான தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக,  மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆளும் கட்சியான தி.மு.க. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், கூட்டணி பலத்தை அதிகரித்துள்ளதுடன், மக்களை கவரும் வகையில், மகளிர் உரிமை தொகை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு டஃப்  கொடுக்கும் வகையில்,  அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பிலும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி  எப்போதும்போல தனித்து களமிறங்குகிறது புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜயின் தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், அக்கட்சியும் தனித்து களமிறங்குகிறது. இதனால்  4 முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான  ஓ. பன்னீர்செல்வம், சமீபத்தில், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின்  கடந்த மாதம் , அதாவது 2026 பிப்ரவரி 27 அன்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதையடுத்து, அவர்  திமுகவை பலப்படுத்தும் வகையில், இன்றுமுதல் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். முதற்கட்டமாக தென்மாவட்டங் களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி,  தென்காசி தொகுதிக்குள்பட்ட கடையநல்லூர், ஆலங்குளம், குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலையும், கடையநல்லூர், சங்கரன்கோவில் தொகுதிகளில் மாலையும் ஓபிஎஸ் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நாளை (சனிக்கிழமை) வாசுதேவநல்லூர், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடனை உள்ளிட்ட தொகுதிகளில் பிரசாரம் செய்ய ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.

இதற்கிடையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ்-க்கு   திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அவர் ஏற்கனவே போட்டியிட்ட  பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைமை வழங்கும்  என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]