சென்னை: நல்லகண்ணு மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட அரசியல் தலைவர்கள், திரையுலகினர்  இரங்கல் மற்றும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கம்யூனிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 25) பகல் 1.55 மணிக்கு சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மட்டுமல்ல, பிற அரசியல் கட்சியினரையும், பொதுமக்களையும், உழைக்கும் வர்க்கத்தினரையும் ஆழ்ந்த துயரில் ஆழ்த்தியுள்ளது.

அவரது உடல், தி.நகர் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கா வைக்கப்பட்டு உள்ளது.  நல்லக்கண்ணு உடல், தி.நகர், இந்திய கம்யூ. அலுவலகத்தில்  இன்று  மாலை 3 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது அரசியல் கட்சி தலைவர்கள், திரையுல பிரமுகர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், திரு நல்லகண்ணு அவர்கள் அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே அளவுக்குக் குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் உள்ளன  என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை ஏழைகள், விளிம்புநிலை மக்களுக்கானது; நேர்மை, எளிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு நல்லகண்ணுவின் வாழ்க்கை எடுத்துக்காட்டு. 9 தசாப்தங்களாக நீதி, கண்ணியத்துக்காக நல்லகண்ணு உறுதியாக நின்றார்; குடும்பத்தாருக்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கனிமொழி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி நேரில் அஞ்சலி செலுத்தினார். 

நல்லக்கண்ணுவுக்கு சு.வெங்கடேசன் புகழஞ்சலி செலுத்தினார்.  ஆட்சி, அதிகாரம், பணம், பதவி இவைகள் தான் அரசியல் என்ற அசூயைமிக்க சூழலுக்கு நடுவில் நேர்மை, எளிமை, எந்நிலையிலும் குன்றா கொள்கை இதுவே அரசியலென நிலை நின்றீர்கள். மருத்துவ மாணவர்கள் பாடம் கற்க உடலையும், மாநிலத்து மக்கள் பாடம் கற்க வாழ்வையும் தந்து விட்டு மறைந்தீர்கள். சிரித்த நின்முகத்தினூடே செங்கொடி இயக்கத்தின் வீரநினைவுகள் என்றென்றும் ஒளிவீசும். தோழர் நல்லகண்ணுவிற்கு வீரவணக்கம் என சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன்: வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா நல்லக்கண்ணு. அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும் என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,  அரசியல் நாகரிகம், அப்பழக்கில்லாத ஒழுக்கம், சித்தாந்தப் பற்று, சலியாத உழைப்பு மற்றும் காந்திய எளிமை ஆகியவற்றின் சின்னமாக நூறாண்டுக்கு மேல் வாழ்ந்து தோழர் நல்லகண்ணு அவர்கள் சரித்திரம் படைத்தார் என்று சொல்ல விரும்புகிறேன். அவருடைய நினைவிற்கு நான் தலை வணங்கி அஞ்சலி செலுத்துகிறேன் என  பதிவிட்டுள்ளார்.

செல்வபெருந்தகை: நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும்  அவரது வாழ்க்கையை அடுத்த தலைமுறை படிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டியளித்துள்ளார்.

திருமாவளவன்:  பொது வாழ்வில் நேர்மை, தூய்மை, எளிமைக்கான அடையாளமாக வாழ்ந்தவர் நல்லகண்ணு  என விசிக தலைவர் திருமா புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

டாக்டர் ராமதாஸ்:  தோழர் நல்லக்கண்ணு உடல்நலக் குறைவால் மரணம் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்  தோழர் நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தோழர்கள், பொதுவுடைமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராமதாஸ் அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசன்:  தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்  தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர். தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும் என்று நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

பாரிவேந்தர்:  “தமிழகத்திற்கும் இந்திய அரசியலுக்கும் பெரிய இழப்பு”  நூற்றாண்டு கடந்த மக்கள் தலைவர், அரசியலில் தூய்மையின் இலக்கணம் தோழர் ஆர்.நல்லக்கண்ணு. தன்நலமின்றி மக்களுக்கும், தாம் சார்ந்த கட்சிக்கும் தன் வாழ்வை அர்ப்பணித்த நேர்மையான அரசியல்வாதி என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரேமலதா:   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக காலமானார் என்கிற செய்தி வேதனையை அளிக்கிறது என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழிசை:  சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும் என்று தமிழிசை அவர்கள் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் – அதிகாரிகள் – திரையுலகினர் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

எல்லாருக்கும் நல்லவராக வாழ்ந்தவர் ஐயா நல்லகண்ணு என் இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி அளித்துள்ளார்.

நல்லகண்ணு உடலுக்கு   அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.க மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், வி.சி.க தலைவர் திருமாவளவன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தி. நகரில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு உடலுக்கு த.வெ.க தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு உள்பட பல அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

நல்லகண்ணு உடலுக்கு  இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் சத்யராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் சூர்யா, இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் நாசர் நேரில் சென்று அஞ்சலில் செலுத்தினர்.

மக்களுக்கு எது சரியோ அதில் ஆணித்தரமாக நின்று போராடியவர் பெருந்தலைவர் நல்லகண்ணு என நடிகர் நாசர் புகழஞ்சலி செலுத்தினார்.  அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதில் பெருமை அடைகிறேன் என்று  நடிகர் சிவகார்த்திகேயன்  தெரிவித்தார்.

[youtube-feed feed=1]