சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக 3 முக்கிய ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, பொதிகை, நெல்லை, சோழன் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயில் (12661) மார்ச் 2 முதல் 16ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்படும்.

நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் நெல்லை விரைவு ரயில்(12632) மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவு ரயில்(22675) பிப்.28 முதல் மார்ச் 15ம் தேதி வரை எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு பதிலாக காலை 10.15 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

[youtube-feed feed=1]