டெல்லி: தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்  என  காங்கிரஸ் லோக்சபா தலைவர் ராகுல்காந்தி  பதிவிட்டுள்ளார்.

மத்தியஅரசுக்கு எதிராக இன்று  நாடு முழுவதும்  தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சில பணிகள் முடங்கி உள்ளன. இதற்கு காங்கிரஸ் திமுக உள்பட பல கட்சிகள் ஆதரவு அளித்துளளன. இந்த  நாடு தழுவிய அளவில் நடைபெறும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கமான   எக்ஸ் தளப் பதிவில்,

இன்று, நாடு முழுவதும் மில்லியன் கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

நான்கு தொழிலாளர் குறியீடுகளும் தங்கள் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

வர்த்தக ஒப்பந்தம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

மேலும் MNREGA-வை பலவீனப்படுத்துவது அல்லது நீக்குவது கிராமங்களுக்கான கடைசி ஆதரவையும் பறித்துவிடும்.

அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது, ​​அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டன.

மோடிஜி இப்போது கேட்பாரா? அல்லது அவர் மீது “பிடி” அதிகமாக உள்ளதா?

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]