டெல்லி: பாஜக ஆளும் மாநிலமான தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் (ஜனவரி) மட்டும் சுமார் 807 பேர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு மாதத்திற்கு சராசரியாக 2,000 வழக்குகள் பதிவாகும் போது, ஜனவரி 2026 இல் 807 பேர் காணாமல் போனது அசாதாரணமானதாக கருதப்படுகிறது.
இது மாநில பாஜக அரசின் நிர்வாக தோல்வி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

உலகம் முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுங்ககு எதிராக பாலியல் சுரண்டல்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்களின் கண்ணியமும் பாதுகாப்பும் அச்சறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. அதிலும் சமீபத்தில் நாட்டின் தலைநகரில் நடந்து வரும் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்காவை சேர்ந்த எப்ஸ்டீன் என்பவர் தொடர்பான எக்ஸ்டீன் பைல்ஸ் வெளியாகி பெரும் அதிர்வலைகளையே ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை கடத்தி உயர் பணக்காரர்களுக்கு பாலியல் விருந்தாக கொடுத்து வந்த மறைந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் எடுத்து வைத்திருந்து லட்சக்கணக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு உள்ளது. இது உலக அளவில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில்தான் தலைநகர் டெல்லியில் 2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 857 -பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பதும், நாளொன்றுக்கு சராசரியாக 54 பேர் மாயமாகி இருப்பது அதிர்வ்லைகளை ஏற்படுத்தி உள்ளது.
‘இதுவரை இல்லாத அளவுக்கு பெண்கள், ஆண்கள்,குழந்கைள் என அதிக அளவில் ஜனவரியில் மாயமாகி இருப்பது, டெல்லி மட்டுமின்றி, இந்திய மக்களின் பாதுகாப்பையே கேள்விக்கு உள்ளாகியுள்ளது. காணாமல் போன 191 சிறார்களில் 146 பேர் சிறுமிகள் ஆவர். இவர்களில், இதுவரை 235 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 572 பேரின் நிலை என்றவென்று தெரிவியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.3 லட்சம் பேர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்த அதில் 52,000 வழக்குகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என கூறியுள்ளது .
2025-ல் மட்டும் மாயமான 24,500 பேரில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். மனிதக் கடத்தல் மற்றும் சட்ட அமலாக்கத் துறையின் போதாமை போன்ற கட்டமைப்புச் சிக்கல்களே என்றும் வறப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை அடகு வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையோ, நிர்வாகத்தின் மந்த நிலையையோ ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் SDPI கடுமையாக மாநில அரசாங்கத்தை சாடியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து இன்னும் பொதுவெளியில் அதிகமாக பேசப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக, டாப்ரி காவல் நிலையத்தில் தன்னார்வ நடவடிக்கை சங்கம் (AVA) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அளித்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, காவல்துறை அங்கு சென்று வீட்டில் சோதனை நடத்தியதில், அங்கு கடத்தி வைக்கப்பட்ட ஐந்து மைனர் பெண்கள் உட்பட 11 பெண்கள் மீட்கப்பட்டனர்.
அந்தவீட்டில் உள்ள ஒரு அலமாரியைத் திறந்தபோது, உள்ளே ஒரு மைனர் பெண் மறைந்திருப்பதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மீட்கப்பட்டபோது அவள் அதிர்ச்சியடைந்தாள், பயந்து நடுங்கினாள். ஆலோசனையின் போது, சிறுமிகள் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும், நிலையான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் 7 நாய்கள் அந்த வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததும் தெரிய வ்நதது.
சம்பவ இடத்தில் இருந்து எட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் இரண்டு சந்தேகத்திற்குரிய விபச்சார விடுதி நடத்துபவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 143(3) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மேற்கு வங்கம், அசாம் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து கடத்தப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. போலியான வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் மற்றும் சிறந்த வாய்ப்புகளை வழங்கி அவர்கள் ஈர்க்கப்பட்டனர், ஆனால் டெல்லியை அடைந்த பிறகு பிணைக்கப்பட்ட நிலைமைகளுக்கு தள்ளப்பட்டனர். “குழந்தைகள் அண்டை மாநிலங்களிலிருந்து ஈர்க்கப்பட்டு, கடத்தப்பட்டு, அத்தகைய நிலைமைகளுக்குள் தள்ளப்படுகிறார்கள்,” என்று AVA இன் மூத்த இயக்குனர் மணீஷ் சர்மா என்பவர் தெரிவித்து உள்ளார்.
AVA என்பது ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரனின் ஒரு கூட்டாளியாகும், இது குழந்தைகள் துஷ்பிரயோகம், சுரண்டல் மற்றும் கடத்தலை எதிர்த்துப் போராட 450 மாவட்டங்களில் 250 க்கும் மேற்பட்ட அரசு சாரா கூட்டாளர்களைக் கொண்ட ஒரு தேசிய குழந்தை உரிமைகள் வலையமைப்பாகும்.
சமீபத்திய புள்ளிவிவரங்கள் பொதுமக்களின் பதட்டத்தைத் தூண்டியிருந்தாலும், கடந்த கால போக்குகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையைக் குறிக்கின்றன, அதே நேரத்தில் நாடு தழுவிய அளவில் கடத்தல் மற்றும் கடத்தல் வழக்குகளில் 3 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]