டெல்லி: பிரதமர் மோடி மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதில் உரையாற்ற வந்தபோது, எதிர்க்கட்சிகள் கோஷமிட்டனர். மேலும்,  மோடிக்க எதிர்ப்பு  தெரிவித்து  அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.

அவையில் பேசிய பிரதமர் ‘மோடி உன் கல்லறை தோண்டப்படும்’ போன்ற முழக்கங்களை எழுப்பும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்துவிட்டன என்று சாடினார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து, பிப்ரவரி 4ந்தேதி பிரதமர் மோடி பதிலுரை ஆற்றுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மக்களவைக்கு வருவதை தவிர்த்தார். இது விவாதப்பொருளானது. இதுகுறித்து அவையில் பேசிய சபாநாயகர் ஓம். பிர்லா, பிரதமரை தாக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டினார். அதனால்தான், பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என கூறியதாக தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில்,   மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை வழங்காத நிலையில்,  நேற்று மாநிலங்களவைக்கு வருகை தந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும்; என்னை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், மாநிலங்களவை  தலைவர் எச்சரிக்கையை அடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து,   குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அன்று ராஜ்யசபாவில்  உரையாற்றினார்.

அப்போது,   எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக ஒரு கடுமையான மற்றும் விரிவான பதிலடியை வழங்கினார். ‘மோடி உன் கல்லறை தோண்டப்படும்’ போன்ற முழக்கங்களை எழுப்பும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்துவிட்டன என்று கூறினார்.