அமெரிக்க நீதித்துறை (DOJ) சமீபத்தில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆயிரக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்களில், இதுவரை பெரிதாக பேசப்படாத சில அதிர்ச்சி தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கோப்புகளின் படி, பெருந்தொற்று காலங்களை (pandemic) லாபமாக மாற்றும் 20 ஆண்டுகால நிதி கட்டமைப்பு கொரோனா வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன்படி, வெளிநாட்டு தடுப்பூசி நிதிகள், பாண்டமிக் ஏற்பட்டால் பணம் கிடைக்கும் காப்பீட்டு திட்டங்கள், தொண்டு நிறுவனங்களின் பெயரில் லாபம் ஈட்டும் நிதி அமைப்புகள், மருந்து நிறுவனங்கள் மற்றும் உலக பொருளாதார அமைப்புகளுடன் இனைந்து செயல்படும் வலையமைப்பு உள்ளதாக ஆவணங்கள் சொல்கின்றன.

இந்த வலையமைப்பு பில் கேட்ஸ், JP Morgan வங்கி மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆகியோருடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சி தகவல் 1: தடுப்பூசிகளுக்கான வெளிநாட்டு நிதி

2011-ம் ஆண்டு ஆகஸ்டில், எப்ஸ்டீன், JP Morgan Asset Management நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேரி எர்டோஸுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அதில், கேட்ஸ் தொடர்புடைய ஒரு தொண்டு நிதிக்கு, “தடுப்பூசிகளுக்காக வெளிநாட்டில் ஒரு தனி நிதி அமைப்பை தயாராக வைத்திருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

இந்த மின்னஞ்சல் அனுப்பியவர், ஏற்கனவே பாலியல் குற்றத்தில் தண்டிக்கப்பட்டவர் என்பதையும் மீறி, எந்த விதமான சட்ட எச்சரிக்கையும் எழவில்லை என்பது கேள்வியை எழுப்புகிறது.

அதிர்ச்சி தகவல் 2: ‘தொண்டு’ என்ற பெயரில் லாபம்

அதே மின்னஞ்சல் பதிலில், “தொண்டு நிறுவனத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது கேள்விக்குரிய ஒன்று, அதனால் லாபம் ஈட்டும் பகுதிகள் தனியாக இருக்க வேண்டும்” என்று எப்ஸ்டீன் எழுதியதாக கூறப்படுகிறது.

இதன் மூலம், தொண்டு அமைப்பின் பெயரில் லாபம் ஈட்டும் திட்டம் இருப்பதை அவர் நேரடியாக ஒப்புக்கொண்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அதிர்ச்சி தகவல் 3: பாண்டமிக் – ஒரு முதலீட்டு துறை

2017-ம் ஆண்டு மே மாதத்தில், பில் கேட்ஸின் அறிவியல் ஆலோசகர் போரிஸ் நிகோலிக், எப்ஸ்டீன் மற்றும் கேட்ஸுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “எரிசக்தி, பாண்டமிக் போன்ற துறைகள் முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, பாண்டமிக் ஒரு அவசர நிலை அல்ல; ஒரு முதலீட்டு துறையாக பார்க்கப்பட்டதாக ஆவணங்கள் கூறுகின்றன.

அதிர்ச்சி தகவல் 4: பாண்டமிக் வந்தால் தானாக பணம்

2017 ஜனவரியில், எப்ஸ்டீன் மொபைலில் இருந்த தகவல் ஒன்றில்,

எப்ஸ்டீனின் தொழில் வாய்ப்பு வழங்கும் வலையமைப்பில் உள்ள ஒருவரால் உருவாக்கப்பட்ட “சுவிஸ் ரீ (மறு காப்பீடு) நிறுவனத்தின் சுகாதாரப் பொருட்களை உருவாக்கும் குழுவில் சேருங்கள். பெருந்தொற்றுக்களுக்காக ஒரு திட்டத்தை உருவாக்கினோம், பாராமெட்ரிக் தூண்டுதலை (பாண்டமிக் ஏற்பட்டால் தானாக பணம் வழங்கும் காப்பீட்டு திட்டம்) உருவாக்க உதவினோம்.” என்று ஒரு வேலை வாய்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு சில மாதங்கள் கழித்து, உலக வங்கி, சுவிஸ் ரீ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட பாண்டமிக் பாண்டுகள் என்ற புதிய நிதி திட்டத்தை வெளியிட்டது. அதில் கொரோனா போன்ற வைரஸ்கள் கூட ஆபத்தாக பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிர்ச்சி தகவல் 5: எப்ஸ்டீனை நேரடியாக கேட்ட பில் கேட்ஸ்?

2013 ஆகஸ்ட் 8-ம் தேதி அதாவது எப்ஸ்டீன் தண்டிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு.எழுதிய ஒரு ஒப்பந்தக் கடிதத்தில், “போரிஸ் நிகோலிக்கான பிரதிநிதியாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் இருக்க வேண்டும் என்று பில் கேட்ஸ் வலியுறுத்தினார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக எந்த விதமான நலன் மோதல் குற்றச்சாட்டும் எழாது என்று, கேட்ஸ் தரப்பில் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆவணங்கள் உண்மையென நிரூபிக்கப்பட்டால்,

  • பாண்டமிக் முன்கூட்டியே வியாபார வாய்ப்பாக திட்டமிடப்பட்டதா?
  • தொண்டு என்ற பெயரில் லாபம் ஈட்டப்பட்டதா?
  • அரசுகள் மற்றும் உலக அமைப்புகள் இதை அறிந்திருந்தனவா?

என்ற பல கேள்விகள் எழுகின்றன.

 

[youtube-feed feed=1]