தங்க வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கில், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் நகரங்கள் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் ஷாங்காய் தங்க பரிமாற்ற மையத்துடன் (Shanghai Gold Exchange) திங்கட்கிழமை கையெழுத்தானது.
உலக அரசியல் மற்றும் பொருளாதார குழப்பம் காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 5,000 அமெரிக்க டாலரை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஹாங்காங் நிர்வாகத் தலைவர் ஜான் லீ, “ஹாங்காங்கை உலக அளவிலான தங்க வர்த்தக மையமாகவும், பொருள் வர்த்தக சூழலாகவும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் இடையே தங்க வர்த்தகம் மற்றும் கணக்கீடுகளுக்கான (clearing) எல்லை தாண்டிய அமைப்பு உருவாக்கப்படும் என அவர் கூறினார்.
தற்போது ஹாங்காங் விமான நிலையத்தில் உள்ள தங்க சேமிப்பு மையம் 150 டன் கொள்ளளவு கொண்டது. ஆனால் அது ஏற்கனவே முழுத் திறனை நெருங்கி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அடுத்த மூன்று ஆண்டுகளில் தங்க சேமிப்பு கொள்ளளவை 2,000 டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஹாங்காங், ஆசியாவின் முக்கிய தங்க சேமிப்பு மையமாக உருவாகும் என ஜான் லீ கூறினார்.
இந்த ஒப்பந்தம் ஹாங்காஙில் நடைபெற்ற ஆசிய நிதி மாநாட்டில் கையெழுத்தானது. இதில் ஷாங்காய் தங்க பரிமாற்ற மைய தலைவர் யூ வென்ஜியான் மற்றும் சீன மக்கள் வங்கியின் துணை ஆளுநர் ஜௌ லான் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், ஹாங்காஙில் அரசு நிர்வகிக்கும் மத்திய தங்க கணக்கீட்டு அமைப்பு (central clearing system) உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், அது இந்த ஆண்டே சோதனை அடிப்படையில் செயல்பட தொடங்கும் என நிதித் துறை செயலாளர் கிறிஸ்டோபர் ஹுய் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]