விசாகப்பட்டினம்: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மனித வடிவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏ.எஸ்.சி அர்ஜுன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மனித வடிவிலான ரோபோவான ஏ.எஸ்.சி அர்ஜுன் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவைகளுக்காக முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயில் இது போன்ற ஒரு முதல் முயற்சியாக, கிழக்கு கடற்கரை ரயில்வே (ECoR) மண்டலத்தின் வால்டேர் கோட்டம், பயணிகளின் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்தும் நோக்கில், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ‘ASC அர்ஜுன்’ என்ற மனித உருவ ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும், பயணிகளுக்கான உதவியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
மனித உருவ ரோபோ. பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதையும், பயணிகளுக்கான உதவியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ரயில்வே பாதுகாப்புப் படையின் (RPF) நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ரோபோ பயன்படுத்தப்பட்டுள்ளது
இந்த ரோபோட் ஆர்.பி.எஃப் எனப்படும் ரயில்வே போலீஸ் படையின் கீழ் இயங்கும் என கூறப்பட்டுள்ளது. இது, இந்திய ரயில்வே வரலாற்றில் இது முதன்முறையாக மேற்கொள்ளப்படும் முயற்சி என தேசிய போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த ரோபோ முழுமையாக விசாகப்பட்டினத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உருவாக்கப்பட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உயர் தரமான வசதிகளுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக ஒரு ஆண்டிற்கும் மேலாக ஒரு குழு தீவிரமாக பணியாற்றியுள்ளது என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ஏ.எஸ்.சி அர்ஜுன் ரோபோவின் பணிகள்:
இந்த ரோபோ பாதுகாப்பு பயணிகளுக்கான உதவி, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது, சுத்தம் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு போன்ற பல்வேறு ரயில்வே செயல்பாடுகளுக்கு துணைப் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோட் ஃபேஸ் ரெக்கனேஷன் மூலம் ஊடுருவலை கண்டறிந்து ஐ.ஓ.டி (IOT) எனப்படும் எச்சரிக்கைகள் மூலம் ரயில்வே போலீஸ் அதிகாரிகளை உடனடியாக எச்சரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புகள்
ஏ.ஐ. அடிப்படையிலான பயணிகள் கூட்ட நெரிசலை ஆய்வு செய்யும் அமைப்பு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறைக்கும் தாமதமின்றி தகவல் தெரிவிக்கிறது.
ரயில் நிலையத்தில் உள்ள மக்கள் கூட்டம் போன்ற நிலைமையை ஆராய்ந்து, ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் தன்னிச்சையான பாதுகாப்பு மற்றும் தகவல் அறிவிப்புகளை இந்த ரோபோ வழங்குகிறது. மேலும், பயணிகளுடன் சைகைகள் மற்றும் தகவல் ஆதரவின் மூலம் தொடர்பு கொள்ளும் திறன் கொண்டதாக உள்ளது.
இதன் மூலம் பயணிகளின் விழிப்புணர்வும் விதிமுறைகளைப் பின்பற்றும் மனப்பாங்கும் மேம்படுகிறது. மேலும், கூட்ட நெரிசலின் போது பொதுமக்களைச் சரியான வழியில் வழிநடத்தவும், குழப்பத்தை குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். மேலும், பொதுமக்களிடையே நம்பிக்கை அதிகரிப்பதுடன், ஆர்.பி.எப் அமைப்பின் அதிகாரமும் நம்பகத்தன்மையும் மேலும் வலுப்பெறுகிறது.‘
இதுமட்டுமின்றி ரயில் நிலையங்களில், தீ மற்றும் புகை போன்ற விபத்துக்கள் குறித்து, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி எச்சரிக்கை வழங்கும் திறன், அவசர சூழ்நிலைகளில் விரைவான நடவடிக்கையை எடுக்க உதவுவதுடன், பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.
[youtube-feed feed=1]