சென்னை: சென்​னை, செங்​கல்​பட்டு உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​பு உள்​ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வங்கக்கடலின் மேல் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இரு நாட்கள் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறிய நிலையில், நேற்று முதல் சென்னை உள்பட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த நிலையில்,  இனறும், நாளையும் சென்னை உள்பட கடற்கரையோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில்,   கிழக்கு திசை​யில் இருந்து மேற்கு நோக்கி நகரும் வளிமண்டல அலை நிகழ்வு தற்​போது நில​வு​கிறது. மேலும் தென்​னிந்​திய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நில​வு​கிறது. இதன் காரண​மாக இன்று(ஜன.24) கடலோர தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும், உள் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

சென்​னை, செங்​கல்​பட்​டு,காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், திரு​வண்​ணா​மலை, விழுப்​புரம், கடலூர் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் கனமழை பெய்ய வாய்ப்​பு உள்​ளது.

நாளை (25-ம் தேதி) தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், 26-ம் தேதி தமிழகத்​தில் ஒருசில இடங்​களி​லும், கடலோர தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களி​லும் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்​யக் கூடும்.

ஜனவரி 27 முதல் 29-ம் தேதி வரை தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் வறண்ட வானிலை நில​வக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் இடி, மின்னலுடன் மித​மானது முதல் கனமழை பெய்​யக்​கூடும். இன்​றும், நாளை​யும் தமிழக கடலோரப் பகு​தி​கள்,மன்​னார் வளை​குடா, குமரிக்​கடல் பகு​தி​களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக்​காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

இவ்​வாறு  செய்​திக்​குறிப்பில் கூறப்​பட்​டுள்​ளது.

[youtube-feed feed=1]