சென்னை: திமுக ஆட்சிக்கு முடிவுகட்டும் இது என மதுர்ந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில், பாஜக உள்பட சில கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி உள்ளது. இந்த அணியின் முதல் தேர்தல் பொதுக்கூட்டம், சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்றது. முன்னதாக, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் வந்தார்.

பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர். கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக அரசை கடுமையாக சாடினார். விழாவில் அவர் பேசியதாவது: இந்தியாவே இன்று மதுராந்தகத்தை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறது. பிரதமர் என்ன பேசுவார் என்று நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
பிரதமர் மோடி தமிழகம் வந்ததும் இயற்கையே சூரியனை மறைத்துவிட்டது. எங்களும் மக்கள் வெள்ளம், மக்கள் கடல்போல காட்சியளிக்கிறார்கள். இதுவே இந்த கூட்டணியின் வெற்றிக்குச் சான்று. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 210 தொகுதிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என்றார்.
“மோடி என்ன பேசப் போகிறார் என்பதை தற்போது நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மோடியை பார்ப்பதற்காக மக்கள் திரண்டுள்ளனர். இந்த மக்கள் வெள்ளத்தைப் பார்க்கும்போது வரும் தேர்தலில் நாம் வெற்றிப்பெற போவது உறுதி என்பது தெரிகிறது. அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் நமக்கு வெற்றி நிச்சயம். கடந்த நாலே முக்கால் ஆண்டு மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு கிடைத்தது வெறும் துன்பம் மட்டுமே. அனைத்து தரப்பு மக்களும் கஷ்டப்படுகின்றனர். ஒரு குடும்பம் வாழ 8 கோடி குடும்பங்கள் சுரண்டப்படுவது நியாயமா? மு.க. ஸ்டாலின் முதல்வரான பின்னர் செய்தது ஊழல் மட்டுமே.
மு.க. ஸ்டாலின் தனக்குப் பிறகு உதயநிதியை முதல்வராக்க துடிக்கிறார். கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் ஆள வேண்டுமா? எந்த தகுதியும் இல்லாத உதயநிதி்க்கு எம்எல்ஏ, அமைச்சர் மற்றும் துணை முதல்வர் பதவிகள் வழங்கப்பட்டன.
முதல்வர் ஸ்டாலின் குடும்பம் உலக அளவில் பணக்கார குடும்பமாக உள்ளது; எந்த தகுதியின் அடிப்படையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி?; தே.ஜ கூட்டணி மிக வலிமையாக உள்ளது; பிரதமர் மோடி நமக்கு துணை நிற்கிறார். இந்த தேர்தல் தான் திமுகவுக்கு இறுதி தேர்தல். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். நமது கூட்டணி வெற்றிக் கூட்டணி. வலிமையான கூட்டணி” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “தேர்தலில் தேனீக்கள் போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு எதிரிகளை வீழ்த்திக் காட்டுவோம். தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் இது. இந்த தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையப் போவது உறுதி” என்றும், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எந்த திட்டத்தையும் தரவில்லை என்று மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை சொல்லிக் கொண்டு வருகிறார்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசிடம் நாம் கேட்ட திட்டங்கள் அனைத்தும் கிடைத்தன. ரூ.63,000 கோடி மதிப்பிலான மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது.
காவிரி நதி நீர் மாசுபடுவதை தடுக்க ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற திட்டம் வேண்டும் என நான் முதல்வராக இருந்தபோது மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன். ரூ.14,000 கோடி மதிப்பிலான அந்த திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி கொடுத்தது. இது அற்புதமான திட்டம் என்ற மத்திய அரசு, அதனை குடியரசுத் தலைவர் உரையிலும் இடம்பெற வைத்தது.
ஆனால், அந்த திட்டத்தை அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. ‘நடந்தாய் வாழி காவிரி’ என்ற இந்த திட்டம் மேட்டூர், பவானி சாகர், நொய்யல், அமராவதி ஆகியவற்றில் இருந்துவரும் கழிவு நீரை சுத்தப்படுத்தி மீண்டும் காவிரியில் விடுவதாகும். அற்புதமான இந்த திட்டம் அதிமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும்.

அதேபோல், தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மோடி அரசு அனுமதி அளித்தது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். அதனால் நாம் கேட்ட திட்டங்கள் அனைத்தும் கிடைத்தன. ஆனால், திமுக அரசு மத்திய அரசை வேண்டுமென்றே குறை கூறி வருகிறது” என்றும் ஈபிஎஸ் குற்றம்சாட்டினார்.
கொரோனா காலத்தில் மோடி அரசு எடுத்த நடவடிக்கையால் தான் உலகம் முழுவதும் மக்கள் காப்பாற்றப்பட்டனர். கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, அதனை வெளிநாடுகளுக்கும் விலையில்லாமல் கொடுத்து உலக மக்களை காப்பாற்றியவர் நரேந்திர மோடி என்றும் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
தேர்தலில் பெரும்பான்மை பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்; வரும் தேர்தலில் 210 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்களை வாட்டி வதைக்கும் ஆட்சி தேவையா? திமுக ஆட்சி கொடுத்தது துன்பம், வேதனை, ஊழல்தான்; வரும் தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும்; இதுதான் திமுகவுக்கு இறுதித்தேர்தல்.
உரிய இடத்தையும் காலததையும் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் உலகத்தையே ஆளலாம். நமக்கும் அதுக்கான காலம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே கிடையாது. மக்களை வாட்டிவதைக்கும் அரசு தேவையா? ஒரு குடும்பம் வாழ 8 கோடி மக்களை சுரண்டுவது நியாயமா? நான்கே முக்கால் ஆண்டுகளில் திமுக கொடுத்தது துன்பம், வேதனைதான். மு.க. ஸ்டாலின் இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் அவர் செய்தது ஒன்றே ஒன்றுதான் ஊழல்.
இனி எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறாது. திமுகவுக்கு இது இறுதித் தேர்தல். தீய சக்தி திமுகவை வீழ்த்துவோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவோம். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி, வலிமையான கூட்டணி. தேர்தல் எனும் இந்த போரில் கூட்டணி கட்சித் தலைவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றிக்கொடி நாட்டுவோம்.
குடும்ப வாரிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல், குடும்ப ஆட்சிக்கு ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டுகிற தேர்தல். வரும் தேர்தலில் 210 இடங்களில் எங்கள் கூட்டணி வெல்லும். அதிமுக ஆட்சியமைக்கும்.
அதிமுக ஆட்சியில் மத்திய அரசு அனுமதியளித்த காவிரி நதிநீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை என்றவர், மேலும், ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம், பை பை ஸ்டாலின்’ என்று தனது உரையை நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி.
[youtube-feed feed=1]