சென்னை: திமுக என்றாலே ‘ஊழல், போதை மாஃபியா, கிரைம்’, வாரிசு அரசியல், தமிழ் கலாசாரத்தின் எதிரி என மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி உதவி செய்துள்ளதாக கூறியவர், தமிழகத்தில் விரைவில் இரட்டை இன்ஜின் ஆட்சி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
- திமுக தமிழ்நாட்டு எதிராக மட்டும் அல்ல, கடவுளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது
- ஸ்ரீதிமுக அரசு நமது இளைஞர்களை போதைப்பொருள் மாஃபியாக்களிடம் ஒப்படைத்துள்ளது
- தமிழ், தமிழர்கள், தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக
- திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது.
- திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது

கேரளத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுராந்தகம் வந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர். கூட்டத்தில் பாஜக தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடிக்கு திருப்பரங்குன்றம் முருகனின் வெள்ளியிலான உருவம் பதித்த நினைவுப் பரிசை என்டிஏ கூட்டணிக் கட்சி தலைவர்கள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். தமிழர்கள், தமிழ் கலாச்சாராத்தின் எதிரி திமுக. இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள், நேதாஜியோடு சுதந்திர போராட்டத்தில் பல தமிழர்கள் பங்கேற்றனர். வீரம், நாட்டுப்பற்று தமிழக மக்களின் நாடி, நரம்புகளில் நிறைந்துள்ளது என்றவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்திற்கு மத்திய பாஜக அரசு செய்தவற்றை பட்டியலிட்டார்.
‘எனது தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்’ என தமிழில் சொல்லி உரையை தொடங்கிய பிரதமர் மோடி. “2026 ஆம் ஆண்டின் எனது முதல் தமிழக பயணம். பொங்கலுக்குப் பிறகு தமிழகம் சிறப்பாக உள்ளது. இந்த நேரத்தில் ஏரி காத்த ராமரை போற்றி வணங்குகிறேன். அனைவரின் நலன், தமிழ்நாட்டின் நலனுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன்.

சில நாள்களுக்கு முன்பு எம்ஜிஆரின் பிறந்தநாளைக் கொண்டாடினோம். இன்று சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளும்கூட. அவருக்கு எனது அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.
அலை கடல் என மக்கள் வெள்ளம் திரண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும், நாட்டிற்கும் ஒரு முக்கிய செய்தியை அளிக்கிறது. அந்த செய்தி, ஆட்சி மாற்றத்துக்கு தமிழ்நாடு இப்போது தயாராகிவிட்டது. தமிழ்நாடு என்டிஏ – பாஜகவின் அரசை விரும்புகிறது.
இந்த மேடையைப் பாருங்கள், காட்சியைப் பாருங்கள். தமிழ்நாட்டில் எதிர்காலத்தை நிர்ணயிருக்க மேடையில் இந்த தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். ஒரே ஒரு எண்ணத்தோடு உறுதிப்பாட்டோடு அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். திமுக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதே அந்த நிலைப்பாடு.
தமிழ்நாட்டை ஊழலற்ற மாநிலமாக மாற்ற வேண்டும். இப்போது திமுகவின் முடிவுரைக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. நீங்கள் திமுகவுக்கு 2 முறை வாய்ப்பு அளித்தீர்கள், ஆனால் அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இளைத்துவிட்டார்கள். வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது திமுக, ஆனால் செய்த பணிகள் பூஜ்யம்தான்.
திமுக ஆட்சியை CMC ஆட்சி என்று கூறுகிறார்கள். அதாவது ஊழல், குற்றவாளி குழுக்கள், குற்றங்களை(corruption, mafia, crime) ஆதரிக்கும் அரசு. இந்த திமுக, ஊழல் அரசை வேரோடு கிள்ளி ஏறிய வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்.
திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது. திமுக ஆட்சி முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது; ஆட்சி மாற்றத்திற்கு தமிழ்நாடு தயாராகிவிட்டது; திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது.
மேடையில் உள்ள தலைவர்கள் தமிழக எதிர்காலத்தை தீர்மானிப்பர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகிறார்கள்; தமிழ்நாட்டில் வளர்ச்சியடைந்த, ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் அரசாங்கம் அமைவது உறுதியாகிவிட்டது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஜனநாயகம் இல்லை, நம்பகத்தன்மை இல்லை. ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இங்கே இயங்கிக்கொண்டிருக்கிறது” என்று பேசினார்.
திமுக அரசு பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியில் அமர்ந்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை. மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்துள்ளது. தமிழக மக்கள் நிச்சயம் அதை மன்னிக்க மாட்டார்கள். திமுக அரசு ஊழல், மாபியா, கிரைம் என்ற கோட்பாட்டில் செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் ஜனநாயகம் இல்லை, ஒரு குடும்பம் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆட்சி நடைபெற்று வருகிறது.
திமுகவுக்கு ஜனநாயக பொறுப்புணர்வு என்றால் என்வென்றே தெரியாது. அவர்களால் மக்களுக்கான ஆட்சியை ஒருபோதும் கொடுக்க முடியாது. திமுக ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பது சின்னசிறு குழந்தைக்கு கூட தெரியும். ஊழலின் ஊற்றுக்கண்ணாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சி நீடித்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. இவர்கள் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டும். திமுகவில் ஒருவர் வளர வேண்டும் என்றால், நல்ல நிர்வாகம் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை, கட்சி தலைமைக்கு ஜால்ரா போட்டால் அவர்கள் திமுகவில் வளர்ந்து விடுவார்கள். அது மட்டும் தான் திமுகவில் நடந்து வருகிறது. திமுகவின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால், இந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம். 11 லட்சம் கோடி அளவிற்கான திட்டங்களை கொடுத்துள்ளோம். காங்கிரஸ் தமிழ்நாட்டுக்கு கொடுத்ததை விட, மூன்று மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
காங்கிரஸ்-திமுக ஆட்சியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை போன்று, பாஜக ஆட்சியில் நாங்கள் தமிழ்நாட்டை புறக்கணிக்கவில்லை. பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டில் 80 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் உள்ளிட்ட எண்ணற்ற ரயில்களை தமிழகத்திற்கு வழங்கியுள்ளோம்.
தமிழ்நாட்டின் முக்கிய பலமே விவசாயிகள் தான். அவர்களுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததுள்ளது. பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. பாஜக அரசு விவசாயிகளுக்கான அரசு, அவர்களின் வாழ்க்கை சிறக்க தொடர்ந்து பாடுபடும் அரசாக உள்ளது. விவசாயிகள் நாட்டின் சொத்து, அவர்களை பாஜக அரசு எப்போதும் கைவிடாது.

போதைப் பொருட்களின் கூடாரமாக தமிழ்நாடு மாறியுள்ளது. எங்கு திரும்பினாலும் போதைப் பொருள்கள் புழக்கம் உள்ளது. போதைப் பொருள் மாபியா கையில் தமிழக இளைஞர்கள் சிக்கிக் கொண்டுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து விட்டன. போதைப் பொருள்களை பயன்படுத்தி தமிழக இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். இந்த போதைப் பொருள் கும்பலுடன் திமுக அரசுக்கு தொடர்பு உள்ளது. மாணவர்கள், இளைஞர்களை போதைப் பொருள் கும்பலிடம் திமுக அரசு ஒப்படைத்துவிட்டது. அவர்களை மீட்க வேண்டும். வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நிச்சயம் தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாறும்.
முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் போதைப்பொருகள் கட்டுப்படுத்தப்பட்டு, ஆட்சி அதிகாரம் சிறப்பாக இருந்தது. இன்றைக்கு சட்டம், ஒழுங்கு சீரழிந்து விட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை இன்ஜின் ஆட்சி தேவை. தமிழ்நாட்டின் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப் பொருட்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாப்பவும் இந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றுவதைக் கூட விவாதப் பொருளாக உருவாக்கியுள்ளார்கள். வாக்கு வங்கி அரசியல் செய்வதை திமுக வாடிக்கையாக கொண்டுள்ளது. திமுக தமிழ்நாட்டு எதிராக மட்டும் அல்ல, கடவுளுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. இதே போலதான் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட திமுக-காங்கிரஸ் கட்சிகள் முக்கிய காரணமாக இருந்தன. அதை பாஜக அரசு சட்டம் மூலம் உடைத்து தமிழக மக்களின் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்தை மீட்டு கொடுத்தோம். அதை போலவே திமுக அரசிடம் இருந்து தமிழ்நாட்டை விரைவில் மீட்போம்” என்றார்.
திருப்பரங்குன்றத்தில் நமது முருகப் பெருமானுக்கு விளக்கு ஏற்றுவது விவாதப் பொருளாக்கப்பட்ட போது நம்முடைய தலைவர்கள் எல்லாம் பக்தர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்கள். ஆனால், திமுகவும் அவர்களது கூட்டாளிகளும் தங்கள் வாக்கு வங்கிக்காக நீதிமன்றங்களையும் விட்டு வைக்கவில்லை; அவர்களையும் அவமானப்படுத்தினார்கள்.
“தமிழ்நாட்டில் தாய், தந்தையர்கள் எல்லாம் தங்கள் கண்முன்னே தங்களுடைய குழந்தைகள் நாசமாகிப் போவதைப் பார்த்து துடித்துக்கொண்டிருக்கிறார்கள். நம் இளைஞர்களை போதைப்பொருள் அபாயத்தில் இருந்து மீட்டே ஆக வேண்டும். என்டிஏ கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை போதைப்பொருளில் இருந்து மீட்டெடுக்க உதவும் வாக்காக இருக்கும்.
திமுக ஆட்சியில் போதைப்பொருள், மதுபான குற்றவாளிகள் நன்றாக செழிப்பாக இருக்கிறார்கள் என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்கள் நலனில் கண்ணும்கருத்தாக இருக்கிறது. இளைஞர்களை போதைக் கும்பலிடம் ஒப்படைத்துவிட்டது திமுக. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் நலனே முக்கியம். மருந்துகள் மற்றும் மருத்துவத் தயாரிப்பு சூழல் கொண்டுவர என்டிஏ ஊக்கமளிக்கும். இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் நலனே முக்கியம் முத்ரா திட்டத்தால் இங்குள்ள இளைஞர்கள், முதியோருக்கு மக்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது. இதுவரை இங்கு 6 கோடி கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான உதவிகள் தொழில் முனைவோருக்கு கிடைத்துள்ளது. மத்திய அரசுடன் இசைவுடன் செயல்படும் அரசு இங்கு எப்போது அமையுமோ அப்போதுதான் தொழில் முதலீடுகள் சிறப்பாக இருக்கும்.
பாஜகவின் என்டிஏ அரசின் கொள்கைகள் காரணமாக, விவசாயம் மற்றும் மீன்வளத்துறையில் சாதனைப் படைக்கும் உற்பத்தி எட்டப்பட்டிருக்கிறது. காரணம் என்னவென்றால், மத்திய அரசு மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒவ்வொரு நிலையிலும் ஆதரவாக இருந்துள்ளது”

தமிழ்நாட்டில் குற்றங்களால் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் குற்றங்களை கட்டுக்குள் வைத்திருந்தார். பெண்களே, என்டிஏ அரசை ஏற்படுத்தித் தாருங்கள், இந்த அரசு உங்களுக்கு பாதுகாப்பைத் தரும். தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளிலும் குழாய் மூலமாக குடிநீர் கிடைக்கும், இது மோடியின் உத்தரவாதம்.
தமிழ் மொழி, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன். அது எனக்கு எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை அமைத்திருக்கிறோம். காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியால் நாட்டின் கலாசார ஒற்றுமை பலப்பட்டிருக்கிறது. காசியில் உள்ள பிள்ளைகள் தமிழ் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் தமிழ் கலாசாரத்துக்காக வெறும் வாய்பந்தல் போடுபவர்கள் அல்ல. அதனைப் பாதுக்காக உறுதிப்பாட்டை எடுத்து செயல்படுத்தி வருகிறோம். சில நாள்கள் முன்புதான் முருகப் பெருமானுக்கு விளக்கு போடுவது விவாதப்பொருளாகியுள்ளது.
திமுக வாக்குவங்கியை குஷிப்படுத்த நீதிமன்றம் சென்றது. நமது முருகப்பெருமானுக்கு விளக்கு போடுவது விவாதப் பொருளாக்கப்பட்டபோது, அப்போது நம் தலைவர்கள் எல்லாம் பக்தர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்தார்கள். அவர்களுக்கு கரவொலி அளியுங்கள். திமுகவும் அவர்களின் கூட்டாளிகளும் வாக்கு வங்கியை குஷிப்படுத்த நீதிமன்றங்களைக்கூட விட்டுவைக்கவில்லை. அவர்களையும் அவமானப்படுத்தினார்கள் .
தமிழ், தமிழர்கள், தமிழ் கலாசாரத்தின் எதிரி திமுக. காங்கிரஸ், திமுகவினர்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உங்களை அவமானப்படுத்தினார்கள். ஆனால் என்டிஏ அரசு, சட்டரீதியாக ஆராய்ந்து உங்களுடைய பாரம்பரியத்தை மீட்டுத் தந்தார்கள், கௌரவப்படுத்தினார்கள். தமிழக மக்கள் அனைவரும் தங்கள் பாரம்பரியத்தை கொண்டாடி மகிழ வேண்டும். இதற்கு என்டிஏ அரசு உங்களுக்கு துணை நிற்கும். தமிழகத்தில் திறமைகள் ஏராளம் இருக்கின்றன. திறமைகளுக்கு குறை இல்லை. இப்போது எப்படிப்பட்ட அரசு தேவை என்றால் இங்கே இருக்கும் இளைஞர்கள் மீது அரசு நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த அரசாங்கம் மத்திய அரசோடு இணைந்து கரம் கோர்த்து பயணிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்ததாக மாற்றுவோம்”.
இவ்வாறு பேசினார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக பொதுச்செயலாளர்), ஜி.கே. வாசன் (தமாகா தலைவர்), அன்புமணி ராமதாஸ் (பாமக தலைவர்), டி.டி.வி. தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்), நயினார் நாகேந்திரன் (தமிழக பாஜக தலைவர்), பாரிவேந்தர், ஜான் பாண்டியன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.