சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், பேசிய முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் அமர்வு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. மக்கள் பிரச்சினை குறித்த அதிமுக முயற்சித்தபோது, அதை பேச சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்தால். இதனால், பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து பேரவையில் மீண்டும்  அரசு ஊழியர்கள் பிரச்சினை எழுப்பப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேரவையில் பதிலுரை அறித்தார்.  அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை சிறையில் அடைக்க வில்லை என எடப்பாடிக்கு பதில் கூறினார். மேலும,  அதிமுக ஆட்சியைப் போல் இரவோடு இரவாக அரசு ஊழியர்களை நாங்கள் கைது செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.

நாங்கள் அரசு ஊழியர்கள் பிரச்சனையில் 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்றும், மீதமுள்ள அரசு ஊழியர்களின் கோரிக்கை கட்டாயம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தவர்,  23 ஆண்டு கால பிரச்சனையை நாங்கள் தீர்த்து வைத்துள்ளோம். *அரசு ஊழியர்களின் போராட்டத்தை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

[youtube-feed feed=1]