சென்னை: கறிக்கோழி விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததை கண்டித்து,  சட்டமன்றத்தில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக அரசு   விவசாயிகள் பக்கம் இல்லை,  “முதலாளிகள் பக்கம்தான்” நிற்கிறது என்று குற்றம் சாட்டினார்,.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரையை சபாநாயகர் மு. அப்பாவு தமிழில் வாசித்தார். அந்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை 2-வது நாளாக நேற்று  , மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. . அத்துடன் சட்டப்பேரவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் 3ம் நாள் கூட்டத்தொடர் இன்று (ஜன.22) தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் கறிக்கோழி விவசாயிகளின் பிரச்னை குறித்து பேசுவதற்காக  அனுமதி கோரப்பட்டது. ஆனால், அதை ஏற்க சபாநாயகர் அப்பாவுல மறுத்து விட்டார். இதனால்,  தங்களுக்கு அனுமதி வழங்கப்படவிலை என்று குற்றஞ்சாட்டி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் சபாநாயகருக்கு எதிராக கோஷமிட்டு அவையில்  இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பின்னர்  பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  ” “திமுக அரசு விவசாயிகள் பக்கம் இல்லை. கொசு ஒழிப்பில் அரசு கவனம் செலுத்தவில்லை, சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்துள்ளது. முதலாளிகள் பக்கம்தான் திமுக அரசு இருக்கிறது; திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்” என கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் “சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது” “20 நாட்களில் 40 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது; கஞ்சா ஆசாமிகளால் கொடூரமான செயல் அரங்கேறி வருகிறது நிரந்தரமான சட்டம் ஒழுங்கு டிஜிபியை நியமிக்காததும் இதற்கு காரணம்”  என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

முன்னதாக, ஜனவரி 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒரு கிலோ கறிக்கோழிக்கு வெறும் 6 ரூபாய் 50 காசுகள் மட்டுமே கூலியாக வழங்கப்பட்டு வருகிறது. தீவன விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதால், இந்தக் கூலியை 20 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து வரும் ஜனவரி 21-ஆம் தேதி கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பே, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகளைப் பொய்ப் புகார்களின் அடிப்படையில் காவல்துறை கைது சிறையில் அடைந்துள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

[youtube-feed feed=1]