சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிரான 2011 தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடரப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றுவரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இது நீதித்துறை மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைச்சாமி சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
2011-ல் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை 2,739 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால், இத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது; அதனால் ஸ்டாலின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2017-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக 2017-ல் உச்சநீதிமன்றத்தில் சைதை துரைசாமி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜனவரி 21ந்தேததி நடைபெற்ற விசாரணை இன்றும் தொடர்கிறது. வழக்கை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில், சைதை துரைசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாஸ்திரி, 2011-ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெற அதிகார துஷ்பிரயோகம் செய்தார்; பண பலத்தை பயன்படுத்தினார் என வாதிட்டார்.
ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை இன்றும் நடைபெற உள்ளது.
[youtube-feed feed=1]