சென்னை: சட்டப்பேரவையின் 2-ம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை வழக்கமான நடைமுறைகளுடன் தொடங்கியது. இதையடுத்து, மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமலேயே வெளியேறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் வாசித்தார். இதையடுத்து சபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவையில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில் முயற்சி எடுக்கப்படும் என்று கூறினார்.
இதனை அடுத்து இன்று காலை சட்டப்பேரவையின் 2வது நாள் அமர்வு தொடங்கியது. சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் மற்றும் எல்.கணேசன், கவிஞர் ஈரோடு தமிழன்பன், திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானம் வாசித்தப் பின் சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் நாளை காலை பேரவை கூடும்.
[youtube-feed feed=1]