சென்னை: ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றமுதல் கூட்டத்தொடர், இன்று (ஜனவரி 20) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற மண்டபத்தில் தொடங்கிய இந்த கூட்டத்திற்கு வருகை தந்தை ஆளுனருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் காவல்துறை மரியாதை அளிக்கப்ப்பட்டது.
மரபுப்படி, ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்துவார். அதனைத் தொடர்ந்து, அதன் தமிழ உரையை சபாநாயகர் வாசிப்பார். இந்தத் தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை அலுவல் ஆலோசனைக் குழு கூடி முடிவெடுக்கும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்திய விதம் மற்றும் அவையிலிருந்து அவர் வெளிநடப்பு செய்தது போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அந்த வகையில்,, இன்றும்,கடந்த 2 ஆண்டுகளைப் போலவே, தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை வருகைதந்த ஆளுநர் ஆர்.என். ரவி, முதலில் தமிழ்த் தாய் பாடல் இசைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சிறிது நேரம் ஆளுநர் காத்திருந்த நிலையில், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து உரையைப் படிக்க மறுத்த ஆளுநர், பேரவையைவிட்டு வெளியேறினார்.
ஆளுநர் ரவி. அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என ஆளுநர் கூறவே, தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடுவது மட்டுமே மரபு என சபாநாயகர் விளக்கம் அதனை ஏற்க மறுத்து அவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்
இதனையடுத்து, ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, சட்டப்பேரவை விதி 17ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: Advertisement ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் சென்றததை இப்பேரவை ஏற்கவில்லை. கணினியில் பதிவேற்றம் செய்துள்ள ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் ஆளுநர் படிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. பேரவைத் தலைவர் அப்பாவு படிக்கவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் முன்மொழியும் தீர்மானம் பேரவை நடவடிக்கை குறித்து இடம் பெறலாம் என்ற தீர்மானத்தை நான் மொழிகிறேன்.
நீண்டகால பாரம்பரியம் கொண்ட மக்கள் சபையின் மாட்சிமையை அவமதிக்கும் செயலாக இருக்கும் என்றே கருதுகிறேன். அரசு எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைக்க வேண்டும், வரலாற்று சிறப்புமிக்க பேரவையின் மாண்பை ஆளுநர் காக்க வேண்டும் பேரவையின் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கை அமலுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
[youtube-feed feed=1]