டெல்லி:  ஜனவரி 26ந்தேதி நடைபெற உள்ள நாட்டின் 77வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் வருகிற 26-ம் தேதி குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில்,  ஒவ்வொரு ஆண்டும்  குடியரசு தினவிழா அணிவகுப்பின்பாது சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பது வழக்கம்.  அதன்படி வரும் 26ந்தேதி (ஜனவரி 26)    நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்களான அன்டோனியோ கோஸ்டா மற்றும் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் இந்தியாவின் 77வது குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வான்டர் லெயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அண்டோனியோ கோஸ்டா ஆகிய இருவரும் வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். அவர்கள் இருவரும் இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது, டெல்லியில் நடைபெறும் 16-வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் அவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்துப் பேச உள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே 2004-ம் ஆண்டு முதல் மூலோபாய உறவு நீடித்து வருகிறது. பல்வேறு துறைகளில் இருதரப்புக்கும் இடையே உறவுகள் வலுவடைந்து வருகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

[youtube-feed feed=1]