டெல்லி: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பான விசாரணைக்கு  நேற்று (ஜனவரி 12ந்தேதி) டெல்லி  சிபிஐ அலுவலகத்தில்  ஆஜரான விஜயிடம் ஒரு நாள் விசாரணை முடிவடைந்த நிலையில்,  இன்று காலை  சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

விஜயின் இன்றும் விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில், பொங்கலுக்கு பிறகு விசாரணை நடத்தும்படி, விஜய் தரப்பு கோரிக்கையை ஏற்று பொங்கலுக்கு பிறகு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் ஒத்திவைத்துள்ளனர்.

முன்னதாக, 2025ம் ஆண்டு  செப்டம்பா் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக அரசியல் பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக   வழக்கை விசாரிக்க  சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று போ் கொண்ட மேற்பாா்வைக் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.  சிபிஐ விசாரித்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழுவிடமிருந்து இந்த வழக்கை சிபிஐ ஏற்றுக்கொண்டு, கூட்ட நெரிசல் தொடா்பான ஆதாரங்களைச் சேகரித்து வருகிறது. சிபிஐ ஏற்கனவே கரூா் பேரணி நடந்த இடங்களை ஆய்வு செய்துள்ளது, மேலும் ஆதாரங்களுக்காக விஜய்யின் பிரச்சார வாகனத்தையும் கைப்பற்றியது. தமிழ்நாட்டில் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த வழக்கில் அப்போதைய தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் தற்போதைய ஆயுதப்படை டிஜிபி எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதம் மற்றும் ஐஜி நிா்மல் குமாா் ஜோஷி ஆகியோருக்கும் திங்கள் கிழமை ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

மேலும் கருரில் சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ததுடன், அந்த பகுதி மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. மேலும், அங்கு உடற்கூறாய்வு செய்யப்பட்ட மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்ததுடன், அங்குள்ள மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தியது. சிபிஐக்கு உதவியாக எய்ம்ஸ்மருத்துவர்குழுவும், மருத்துவமனையில் ஆய்வு செய்தது. மேலும் தவெக நிர்வாகிகளை டெல்லி அழைத்து விசாரணை நடத்தியது. அப்போது, அவர்கள் பல ஆவனங்கள் வீடியோக்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருதுது பெரும் கவனத்தை ஈா்த்துள்ளது.

இதைததொடர்ந்து, தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடத்த சிபிஐ முன்வந்து சம்மன் அனுப்பியது.  அதனை ஏற்று  நேற்று (ஜனவரி 12ந்தேதி)  காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் புறப்பட்டுச் சென்றார். நேற்று நண்பகல் 12 மணிமுதல் மாலை 6 மணிவரை விஜய்யிடம் சிபிஐயின் சிறப்பு குற்றப்பிரிவு பிரிவின் குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  அதாவது காலை 11.29 மணிக்கு சிபிஐ தலைமையகம் வந்த விஜய் 6 மணி நேரங்களுக்கு பிறகு விசாரணை நிறைவடைந்து 6.15 மணிக்கு அங்கிருந்து வெளியேறினாா்

சிபிஐ விசாரணை குழுவால் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் விஜய்யிடம் வழங்கப்பட்டு, அதற்கு எழுத்துப்பூா்வமான வாக்குமூலம் அளிக்குமாறு கேட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அவருக்கு உதவுவதற்காக அந்தக் குழுவிலிருந்து ஒரு சுருக்கெழுத்தாளரும் நியமிக்கப்பட்டாா். விஜய் தனது வழக்கறிஞரின் உதவியுடன் பதில்களை அளித்தாா்.

சிபிஐ தரப்பிலிருந்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ள 20 மணிநேரம் ஒதுக்கக் கோரியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனால், இன்றும் விஜய்யிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, பொங்கலுக்குப் பிறகு அடுத்தக்கட்ட விசாரணையை ஒத்திவைக்கக் கோரி விஜய்யின் வழக்கறிஞர்கள் முன்வைத்த கோரிக்கையை சிபிஐ ஏற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், நேற்றிரவு  அங்கேயே தங்கிய விஜய், தற்போது பலத்த பாதுகாப்புடன் தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

[youtube-feed feed=1]