சென்னை: தமிழர் திருநாளாம்  பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும்  பள்ளிகளுக்கு நாளைமுதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் என்பது இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட இந்து அறுவடைத் திருவிழாக்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் அனுசரிக்கப்படும் மகர சங்கராந்தியுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த நான்கு நாள் கொண்டாட்டம், சூரியன் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் உத்தராயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அதேபோல், 17ஆம் தேதி (சனிக்கிழமை) உழவர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.

இதில் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியாக பொங்கலுக்கு முந்தையதினமான போகி பண்டிகை  அன்று, அதாவது ஜனவரி 14ஆம் தேதியும் விடுமுறை விடப்படுமா எனும் எதிர்பார்ப்பு  பொதுமக்களிடையே எழுந்திருந்தது. . காரணம் ஒவ்வொரு பொங்கல் கொண்டாட்டத்தின்போதும், தமிழ்நாடு அரசு பொங்கலுக்கு முந்தைய தினமான போகி தினத்தன்று அவரவர் தங்களது சொந்த ஊர் செல்ல ஏதுவாக விடுமுறையை அறிவிக்கும்.  அதன்படி இந்த ஆண்டும் போகி பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் ஒருநாள் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நடப்பாண்டு, பொங்கலுக்கு மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் மொத்தம் ஐந்து தினங்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

[youtube-feed feed=1]