சென்னை: ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ. பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்துள்ளார்.
அதுபோல பெண்களின் உரிமைத்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதை, பெண்களுக்கு சர்பிரைஸ் அறிவிப்பு வெளியாகும் என கூறி உள்ளார். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசியல் கட்சிகளிடையே தேர்தல் ஜுரம் வந்துள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக, மக்களவை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இத்துடன், மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகை ரூ.1000ஐ ரூ.1500 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனது. இதை அமைச்சர் பெரியசாமி சூசகமாக தெரிவித்துள்ளார். இதற்காக அறிவிப்பு தேர்தல் அறிவிப்பு முன்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மாநிலம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை பயனாளர்கள் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது; தகுதி உள்ளவர்கள் விடுபட்டிருந்தால் கோரிக்கை வைத்தால் அவர்களுக்கும் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கூறி உள்ள நிலையில், வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மகளிர் உரிமை தொகை ₹1,000-ல் இருந்து ₹1,500 ஆக உயர்த்தப்படலாம் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சபொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையின் கருத்து பதில் அளித்தார்.
“ஆட்சியில் பங்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார். யார் எது வேண்டுமானாலும் கேட்கலாம். முடிவு முதலமைச்சர் கையில் உள்ளது” என்றார்.
பொங்கல் பரிசு தொகை குறித்த அண்ணாமலை விமர்சனத்துக்கு பதில் கூறியவர், “அண்ணாமலை அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. நிதி நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சியைப் போல் குளறுபடி கிடையாது. அனைத்து திட்டங்கள் மூலமும் அரசின் வருவாயை உயர்த்தி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். நிதி நிலையை கையாளுவதில் தமிழக அரசு போல் இந்தியாவில் எந்த அரசும் இருக்க முடியாது” என்று பதிலளித்தார்.
விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்துவது குறித்த கேள்விக்கு, “அதைப்பற்றி கூற ஒன்றும் இல்லை. அவர் முதலில் தேர்தலுக்கு வரட்டும். தேர்தலை சந்தித்த பின் தான் அவர் பின்பு என்ன பலம் இருக்கிறது என்று தெரியும். தோராயமாக என்ன பலம் இருக்கிறது என்று சொல்ல முடியாது” என்று கூறினார்.
திமுகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்டதற்கு, “ராமதாஸ் உள்ளத்தில் இருந்து நல்லாட்சி என்று உண்மையை கூறியுள்ளார். அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு தலை உயர்ந்து நிற்கிறது. அனைத்து துறைகளிலும் உயர்ந்து இருக்கும் தலைவராக முதலமைச்சர் உள்ளார்” என்று பதிலளித்தார்.
தேர்தல் அறிக்கையில் கதாநாயகனாக இருக்கும், “மகளிர் உரிமைத்தொகை மேலும் உயர்த்தப்படும்” என்று சூசகமாக அறிவித்திருந்தார். அதாவது, “விரைவில் பெண்களுக்கு இனிப்பான செய்தி வர இருக்கிறது” என்று கூறினார்.
[youtube-feed feed=1]