டெல்லி: பிரபல சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் உள்ள ஆபாசமான, பாலியல் ரீதியாக வெளிப்படையான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை தாமதமின்றி நீக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கம் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆபாச படங்கள், வீடியோக்கள், ஏஐ தொழில்நுட்பத்திலான பாலியல் சீண்டல்கள் போன்றவை மீண்டும் அதிகரித்து வருகிறது. இது, இளைய தலைமுறையினரின் வாழ்வியலை சீர்குலைத்துவிடும் நோக்கி உள்ளது. இதனால், இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆபாசங்களை உடனடியாக நீக்க வேண்டும் என X நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ள மத்தியஅரசு, அதற்கு 72 மணி நேரம் கெடு விதித்து உள்ளது. இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.
AI தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் நன்மைகளை போலவே தீமைகளும் அதிகரித்துள்ளன. AI தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் பெண்களை ஆபாசமாகவும், அரைகுறை ஆடைகளுடனும் சித்தரித்து அதனை சமூகவலைத்தளத்தில் பதிவிடுவது அதிகரித்து வருகிறது. பிரபல நடிகைகள், அரசியல் தலைவர்கள், முன்பின் தெரியாத பெண்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்கள் மூலம் டவுன்லோடு செய்து அதனை எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகஊடகங்களில் சிலர் வெளியிடுகின்றனர். இந்தப்போக்கு சமூகத்தில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதில் எலான் மஸ்க்கின் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) குறிப்பாக, “க்ரோக் ஏஐ (Grok) ” சேவையானது, பயனர்களால் பெண்களின் அவதூறான அல்லது ஆபாசமான முறையில் சித்தரிக்கும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்க, ஹோஸ்ட் செய்ய, உருவாக்க, வெளியிட அல்லது பகிர தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு நியூசிலாந்து நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தனது நிர்வாண டீப் ஃபேக் புகைப்படத்தை எம்.பி லாரா மெக்லூர் காண்பித்த விவகாரம் பேச்பொருளாகி உள்ளது. AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தனது நிர்வாண டீப் ஃபேக் புகைப்படத்தை காண்பித்து தொழில்நுட்பத்தால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டினார். கூகுள் தேடல் மூலம் இந்த படத்தை உருவாக்க தனது 5 நிமிடங்கள் தான் எடுத்துக்கொண்டது என AI-யின் ஆபத்துகளை அவர் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.
தனது டீப் ஃபேக் ஏஐ புகைப்படம் குறித்து சமீபத்தில் பேசிய நடிகை ஸ்ரீலீலா அபத்தமான விஷயங்களுக்கு ஆதரவு தரவேண்டாம். இந்த விஷயம் என்னை தொந்தரவு செய்தது தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வாழ்க்கையை எளிமையாக மாற்ற வேண்டுமே தவிர, சிக்கலாக்க கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.
நடிகைகளின் போலி ஆபாச படங்கள் குறித்து கவலை தெரிவித்த நடிகை அபர்ணா தாஸ் , “ சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் போலி ஆபாச படங்கள் பரவி கிடக்கின்றன. இதை எப்படி தடுப்பது? என்றே புரியவில்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் இந்த பிரச்னை இன்னும் அதிகமாக இருக்கும் எனப் புரிகிறது” எனக் கவலை தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு நேற்று எக்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் எலான் மஸ்க்-க்கு சொந்தமான சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் உள்ள ஆபாசமான,பாலியல் ரீதியாக வெளிப்படையான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கத்தை தாமதமின்றி நீக்க வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டது. குறிப்பாக அதன் AI பயன்பாடான க்ரோக் மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை நீக்க வேண்டும், அவ்வாறு செய்யத் தவறினால் சட்டரீதியான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேற்கண்ட தேவைகளுக்கு இணங்கத் தவறினால் அது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும், மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், தகவல் தொழில்நுட்ப விதிகள், BNSS, BNS மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி உங்கள் தளத்திற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எக்ஸ் நிறுவனம் தனது AI அடிப்படையிலான பயன்பாடான “க்ரோக்”-ஐ விரிவான தொழில்நுட்ப, நடைமுறை மற்றும் ஆட்சி நிலை மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
எக்ஸ் நிறுவனம் “அதன் பயனர் சேவை விதிமுறைகள், ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டுக் கொள்கைகள் மற்றும் AI பயன்பாட்டு கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, இதில் மீறும் பயனர்கள் மற்றும் கணக்குகளுக்கு எதிராக இடைநீக்கம், நிறுத்தம் மற்றும் பிற அமலாக்க நடவடிக்கைகள் போன்ற வலுவான தடுப்பு நடவடிக்கைகள் அடங்கும்.
இந்த நோட்டீஸின் நகல்கள் உள்துறை அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் NCW, NCPCR மற்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]